பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய தகவல்!! எச்சரிக்கை விடுத்த அன்பில் மேகேஷ்!! 

Photo of author

By Rupa

பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய தகவல்!! எச்சரிக்கை விடுத்த அன்பில் மேகேஷ்!!

கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து வகுப்பினருக்கும் பொது தேர்வானது தொடங்கப்பட்டது. மே மாதம் ஐந்தாம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. மேற்கொண்டு மாணவர்கள் உயர் கல்வியில் சேர்வதற்கு அறிவுரை கூறும் விதமாக தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில் தற்பொழுது பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பதிவானது இணையதளம் மூலம் நிறைவடைந்துள்ளது.

இனிவரும் நாட்களில் தான் அதற்கான கலந்தாய்வு தொடங்கப்படும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஒன்று முதல் 12-ஆம் வகுப்பு வரை செல்லும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதில் ஏதேனும் தாமதம் ஏற்படுமா என்று பலரும் கேள்வி எழுப்பினர்.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், காலநிலை பொருத்து இறுதியில் முடிவு எடுக்கப்படும் என்று கூறி வந்தார்.

ஆனால் வெயிலின் தாக்கம் குறையாமல் இருப்பதால் மாணவர்களால் பள்ளிக்கு வந்து படிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஜூன் மாதம் 7 ஆம் தேதி முதல் அனைத்து வகுப்பினருக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்கு முன்னதாக எந்த ஒரு பள்ளிகளும் திறக்கப்படக்கூடாது என்றும் எச்சரித்திருந்தார்.

ஆனால் பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்பை மீறி சென்னையில் இன்று தனியார் பள்ளி ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உத்தரவை மீறி பள்ளி திறக்கப்பட்டுள்ளாதல் அந்த அதிகாரிகள் மீது தற்போது நடவடிக்கை எடுக்க கோரி உத்தரவிட்டுள்ளனர். குறிப்பாக சிபிஎஸ்சி பள்ளிகளில் கூட பத்தாம் வகுப்பு மேல் பயிலும் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம், ஆனால் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள் ஒருபோதும் விடுமுறை நாட்களில் பள்ளிகளை திறக்க கூடாது என்று மீண்டும் எச்சரித்துள்ளார். மேற்கொண்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதா என மாவட்ட வாரியாக அதிகாரிகள் வைத்து ஆய்வு செய்து வருவதாகவும் கூறினார்.