இனி செல்பி எடுத்தால் அனுமதி கிடையாது!! திருமலை திருப்பதியின் அதிரடி உத்தரவு!!

0
140
#image_title

இனி செல்பி எடுத்தால் அனுமதி கிடையாது!! திருமலை திருப்பதியின் அதிரடி உத்தரவு!!

திருப்பதியில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் வேளையில் அதற்கு ஏற்றார் போல் தரிசன முறையில் தேவஸ்தானம் மாற்றம் செய்து வருவது வழக்கமான ஒன்று.அந்த வகையில் கடந்த வாரம் கூட புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், தற்பொழுது கோடை காலம் என்பதால் பக்தர்களின் கூட்டமானது அதிகரித்துள்ள நிலையில் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை பக்தர்கள் சுப்ரபாத சேவையில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என கூறினர்.

அத்தோடு ஜூன் 30-ம் தேதி வரை விஐபி தரிசனம் கிடையாது என்றும் அந்த நேரத்தில் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் என தெரிவித்தனர்.இதன் மூலம் பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நேரம் சற்று குறைய அதிக வாய்ப்புள்ளதாக தேவஸ்தானம் போர்டு கூறியது. இதனையடுத்து தற்பொழுது திருப்பதிக்கு செல்லும் மலைப்பாதையில் அதிக அளவு விபத்துக்கள் நடைபெற்று வருகிறது.கடந்த மாதம் கூட இருவர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போதும் அதிக அளவு விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. அதனை தடுக்க திருப்பதி கூடுதல் டிஎஸ்பி புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளார்.

அந்த வகையில் திருப்பதி திருமலைக்கு செல்லும் பக்தர்கள் தாங்கள் வரும் வாகன ஓட்டுனர்கள் முறையாக மலைப்பாதைகளில் ஓட்ட தகுதியானவர்களா என்பது கட்டாயம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வழிகளில் நின்று செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மீறி மலைப்பாதைகளின் நடுவில் வாகனங்களை நிறுத்தி செல்பி எடுத்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இது மட்டுமின்றி ஓட்டுநர்கள் செல்போன் பேசுவது, அடுத்து வரும் வளைவுகளை காணாமல் வேகமாக வண்டிகளை இயக்குவது ஆகிய செயல்களினால் தான் அதிக அளவு விபத்துக்கள் ஏற்படுகிறது.

எனவே இவை அனைத்தையும் தவிர்க்கும் விதத்தில் வேகத்தடை அமைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறினார். அதேபோல வாகனங்களில் வருபவர்கள் முறையான தகுதி சான்றிதழ் இல்லை என்றால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது எனக் கூறினார். மேற்கொண்டு ஓர் வண்டியில் அதிக பயணிகள் இருக்கக் கூடாது என்றும், ஓட்டுநர்கள் திருமலைக்கு செல்லும் வரை தூங்காமல் இருப்பதற்காக அவர்களின் முகத்தில் தண்ணீர் அடிக்கப்படும் என்றும் கூறினார்.