குடும்ப அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய தகவல்! வீட்டிலிருந்தே இந்த வழி முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்!
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக ஏழை எளிய மக்கள் அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் முதலான அனைத்து ரேஷன் பொருட்களையும் மலிவான விலையில் பெற்று பயனடைந்து வருகின்றனர். மேலும் மத்திய அரசின் அனைத்து உதவிகளும் ரேஷன் கார்டு வாயிலாக பொதுமக்கள் பெற்று வருகின்றனர். மத்திய அரசின் பிஎம் கரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தின் மூலமாகவும் மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் ஆதார் கார்டு மூலமாகவும் இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் பொருட்களை பெற முடியும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் சமமாக ரேஷன் பொருட்கள் சென்றடைய வேண்டும் என்பதே பொது விநியோகத் திட்டத்தின் நோக்கமாகும். சில ரேஷன் கடைகளில் அனைத்து மக்களுக்கும் ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் தற்போது அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் முறையாக ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும்.
மேலும் அவ்வாறு வழங்கவில்லை என்றால் மக்கள் அவரவர்களின் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் புகார் அளிக்க முடியும் என்றும் அதற்கான அதிகாரபூர்வமான https://nfsa.gov.in/State/TN என்ற இனிய தளத்தின் மூலமாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1967 அல்லது 1800- -425-5901,04325665566 மற்றும் 04428592828 என்ற கட்டணம் இல்லாத எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.மேலும் நேரடியாக உங்கள் அலுவலக முகவரிக்கு சென்று புகார் கொடுக்கலாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.