நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் காலமானார்… ரசிகர்கள் அதிர்ச்சி!

0
61

நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் காலமானார்… ரசிகர்கள் அதிர்ச்சி!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் அறியப்பட்ட இயக்குனர் நடிகர் பிரதாப் போத்தன் இன்று காலமாகியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த பிரதாப் போத்தன் தமிழ் மற்றும் மலையாளத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முடுபனி, பன்னீர்புஷ்பங்கள் மற்றும் அழியாத கோலங்கள் ஆகியவை இன்றும் அவரின் பெயர் சொல்லும் படங்களாக உள்ளன.

நடிப்பு மட்டுமின்றி பல வெற்றிப்படங்களையும் இயக்கியவர் பிரதாப் போத்தன். வெற்றி விழா மற்றும் சீவலப்பேரி பாண்டி ஆகிய படங்கள் இவரின் இயக்கத்தில் உருவானப் படங்களில் முக்கியமானவை. இவர் நடிகை ராதிகாவை முதலில் திருமணம் செய்தார். பின்னர் இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு அமலா சந்தியநாத்தை திருமணம் செய்துகொண்ட பிரதாப் அவரையிம் 2012 ஆம் ஆண்டு பிரிந்தார். இவருக்கு கேயா என்ற மகள் இருக்கிறார்.

இந்நிலையில் உடல்நலப் பிரச்சனைகளால் இன்று பிரதாப் போத்தன் சென்னையில் அவரது இல்லத்தில் இயற்கை எய்தியுள்ளார். அவருக்கு வயது 69. இவரின் மரணம் தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.