குடும்பத் தலைவிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! அடுத்த வாரம் முதல் ரூ 1000 வழங்கப்படலாம்?

Photo of author

By Parthipan K

குடும்பத் தலைவிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! அடுத்த வாரம் முதல் ரூ 1000 வழங்கப்படலாம்?

கடந்த தேர்தலின் போது திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் பல்வேறு விதமான வாக்குறுதிகளை அளித்தது. அந்த வகையில் திமுகவானது குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ ஆயிரம், அரசு பேருந்துகளில் மகளிர்களுக்கு இலவச பயண சீட்டு வழங்குதல், நான் முதல்வர் திட்டம் போன்ற வாக்குறுதிகளை வழங்கியது. எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து அரசு பேருந்துகளில் மகளிர்களுக்கு கட்டணம் இல்லா பயண சீட்டு வழங்கும் திட்டம் மற்றும் நாள் முதல்வர் திட்டம் என ஒவ்வொரு வாக்குறுதியாக நடைமுறைக்கு வந்தது.ஆனால் தற்போது வரை மாதந்தோறும் குடும்பத்தலைவிகளுக்கு வழங்கப்படும் ரூ 1000 திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. இதனைப் பற்றி எந்த தலைவரிடம் கேட்டாலும் விரைவில் அமலுக்கு வரும் என கூறுகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டசபை கூட்ட தொடர்பானது கடந்த மாதம் ஒன்பதாம் தேதி கவர்னர் உரையோடு தொடங்கியது. இந்தக் கூட்டம் மூன்று நாட்கள் நடைபெற்ற 13 ஆம் தேதியோடு முடிவடைந்தது. மேலும் இதனைத் தொடர்ந்து இந்த வருடத்திற்கான பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் திட்டங்கள் குறித்து ஆலோசனை கூட்டமும் நடந்து வந்தது.

மேலும் இந்த ஆலோசனைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் நிதி துறையானது ஈடுபட்டு வருகிறது. அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் இந்த பணிகள் அனைத்தும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து மார்ச் இரண்டாவது வாரத்தில் சட்டசபை கூடும் அந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

அதுமட்டுமின்றி மக்களை கவரும் விதமாக பல்வேறு அறிவிப்புகளும் இந்த பட்ஜெட் தாக்கல் இடம்பெற வாய்ப்புள்ளதாக  தெரிவித்துள்ளனர். அந்த வகையில் அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் வழங்கும் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.