Breaking News

ஜல்லிக்கட்டில் பங்கு பெற விரும்பும் வீரர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

Important information for players who want to participate in Jallikattu! Booking starts today!

ஜல்லிக்கட்டில் பங்கு பெற விரும்பும் வீரர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

தமிழர்கர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அனைவரும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம் தான்.அந்த வகையில் கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு மட்டும் வழங்கப்பட்டது.ஆனால் அந்த பொருட்கள் அனைத்தும் சுகாதரமற்றதாக இருந்தது என பல்வேறு தரப்பில் இருந்து புகார் தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இந்த ஆண்டின் பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.அந்த கூட்டத்தில் ரூ 1000 ரொக்க பணம்,பச்சரிசி,சர்க்கரை வழங்க முடிவு செய்யப்பட்டது.ஆனால் அதனை தொடர்ந்து விவசாயிகள் கரும்பு வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.அவர்களின் கோரிக்கையை ஏற்று பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.

கடந்த தினங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து நேற்று காலை சென்னையில் ரேஷன்கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதை தொடங்கி வைத்தார்.பொங்கல் பரிசு தொகுப்பை தொடர்ந்து பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறுவதும் வழக்கம் தான்.  அந்தவகையில் மதுரை மாவட்டத்தில் பாலமேடு,அவனியாபுரம்,அலங்காநல்லூர் ஆகிய கிராமங்களில் நடைபெறும். இதில் முக்கியமான ஜல்லிக்கட்டு என்றால் அவை அலங்காநல்லூர் தான் இந்த போட்டி ஜனவரி 17 ஆம் தேதி நடைபெற உள்ளது.

மதுரை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுகள் மற்றும் மாடுபிடி வீரகளுக்கான கட்டுப்பாடுகள் முன்னதாகவே அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் இன்று முதல் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடங்குகின்றது.மேலும் இந்த போட்டியில் பங்கு பெற விரும்புபவர்கள் இணையத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என் அறிவிக்கப்பட்டுள்ளது.மாடுபிடி வீரர்கள் madurai.nic.in என்ற இணையதளம் மூலம் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனுடன் மாடுபிடி வீரர்கள் கொரோனா தடுப்பூசி சான்று,வயது சான்று,போட்டோ போன்றவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.மேலும் ஜல்லிக்கட்டில் பங்கு கலந்துகொள்ளும் காளைகளுக்கும் முன்பதிவு செய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.மதுரை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று நண்பகல் 12 மணி முதல் 12 ஆம் தேதி மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உரிமை இவர்களுக்கு மட்டுமே உள்ளது!  பொது சிவில் சட்டத்துக்கு எதிரான வழக்கு!

கெட் அவுட் ரவி! ஒட்டப்பட்டிருந்த போஸ்டரால் பரபரப்பு!

Leave a Comment