பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பொங்கலை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவையில் நேரம் மாற்றம்! 

0
184
Important information for travelers! Time change in Metro train service ahead of Pongal!
Important information for travelers! Time change in Metro train service ahead of Pongal!

பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பொங்கலை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவையில் நேரம் மாற்றம்!

தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளிற்கு மக்கள் அனைவரும் அவரவர்களின்  சொந்த ஊர்களில் பொங்கலை கொண்டாடும் விதமாக சென்னையில் இருந்து அனைத்து ஊர்களுக்கும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கபடுகின்றது.மேலும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்வதால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.அதன் காரணமாக அனைத்து இடங்களுக்கும் சிறப்பு ரயில்களும் இயக்கபடுகின்றது.

மேலும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவையானது பணிக்கு செல்வோருக்கு பெரிதும் உதவி வருகின்றது.மெட்ரோ ரயில் சேவை இருபதினால் பணிக்கு செல்பவர்கள் குறித்த நேரத்தில் அலுவலங்களுக்கு சென்று வருகின்றனர்.இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் மூலம் சிங்கிள் ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகம்படுத்த உள்ளனர்.இந்த சிங்கிள் ஸ்மார்ட் கார்டு திட்டம் அமலுக்கு வந்தால் மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்துகளில் ஒரே கார்டை பயன்படுத்தி பயணிகள் பயணம் செய்யலாம்.

மேலும் பேருந்துகளில் பயணம் செய்ய ஒரு முறை அந்த சிங்கிள் ஸ்மார்ட் கார்டை கொடுத்து ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.இதன் மூலம் டபுள் டிராவல் என்ற அடிப்படையில் இரண்டு சேவையும் பயன்படுத்தி கொள்ள முடியும்.அதுமட்டுமின்றி புதிதாக அமைக்க இருக்கும் பேருந்து நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை வரவுள்ளதால் மெட்ரோ நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில்  நாளை மற்றும் ஜனவரி 14 ஆம் தேதி இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.அதனையடுத்து ஜனவரி 18 ஆம் தேதி அதிகாலை 4 மணியில் இருந்து மெட்ரோ ரயில் சேவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக அதிகாலை ஐந்து பணிக்கு இயக்கப்படும் மெட்ரோ சேவை ஜனவரி 18 ஆம் தேதி நான்கு மணிக்கு தொடங்கும் என அறிவித்துள்ளனர்.பயணிகளின் வசதிக்கேற்ப ஐந்து நிமிட இடைவெளியில் இரண்டு நாட்களுக்கு மட்டும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.குறிப்பாக சொந்த ஊரிலிருந்து திரும்ப வருபவர்களுக்கும்,அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கும் இந்த மெட்ரோ ரயில் சேவையின் மாற்றம் உதவியாக இருக்கும்.

Previous articleஇந்த மாவட்டத்தில் மட்டும்  ஜனவரி 16 ஆம் தேதி இறைச்சி கடைகள் செயல்பட தடை! மீறினால் நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!
Next articleஜியோ நிறுவனத்தின் புதிய திட்டம்! இனி ஐபிஎல் டி20 காண பணம் செலுத்த வேண்டாம் முற்றிலும் இலவசம்!