எம்ஜிஆர் அம்மா வை விடுங்க.. அவன் பெயருக்கு கீழ் என் பெயரா!! எடப்பாடி தான் காரணம்.. வெளியான பரபர தகவல்!!

Photo of author

By Rupa

ADMK: எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் வைத்த பாராட்டு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துக் கொள்ளாததது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் அவிநாசி அத்திக்கடவு திட்டம் சார்பாக எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பாராட்டு விழா ஒன்றை விவசாய சங்கத்தினர் நடத்தினர். இதில் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் மறைந்த முதல்வர்களான எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் புகைப்படங்களை தவிர்த்ததற்காக செங்கோட்டையன் இந்நிகழ்ச்சியை புறக்கணித்தார். அதுமட்டுமின்றி இதற்கு முன்கூட்டியே இவர்கள் படமெல்லாம் இடம் பெற வேண்டுமென கூறியிருந்தாராம். அப்படி சொல்லியும் இவர்கள் புகைப்படம் இடம் பெறவில்லை என்பதே முக்கிய காரணம் எனக் கூறுகின்றனர். இப்படி இருக்கையில் இது சரியான காரணம் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இந்நிகழ்ச்சியை புறக்கணித்ததற்கு முக்கிய காரணமாக கூறுவது அவரது பெயரை வேறொரு அமைச்சரின் கீழ் போட்டது தான் என கூறப்படுகிறது. ஏனென்றால் எம்ஜிஆர் காலத்தை தொடர்ந்து ஜெயலலிதா வரை அனைத்து அரசியல் பாதைகளையும் கடந்து வந்த முன்னாள் அமைச்சர் தான் செங்கோட்டையன். இப்படி இருக்கையில் ஜெயலலிதா காலத்தில் வந்த எஸ்பி வேலுமணியின் பெயரை முன்னிறுத்துவதா? என்ற கோபம் இவருக்கு எழுந்துள்ளது.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில்தான் இவர் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளார். இவ்வாறு நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் செய்ததற்கு அச்சமயமே செங்கோட்டையன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து இதற்கு முக்கிய காரணம் எடப்பாடி பழனிச்சாமி தான் என கோபமுற்று இதில் கலந்து கொள்ளவில்லை என அதிமுக தலைமை வட்டாரம் கூறுகின்றது.