தேசிய தேர்வு முகமை வெளியிட்ட முக்கிய தகவல்! மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

Photo of author

By Parthipan K

தேசிய தேர்வு முகமை வெளியிட்ட முக்கிய தகவல்! மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

Parthipan K

Important information published by the National Examinations Agency! Extension of deadline for students to apply!

தேசிய தேர்வு முகமை வெளியிட்ட முக்கிய தகவல்! மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

தேசிய தேர்வு முகமை நேற்று அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தேசிய தேர்வு முகமையின் என் டி ஏ பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வுக்கு சியுஇடி யுஜி 2023 விண்ணப்பிக்க குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த கால அவகாசம் தற்போது மார்ச் 3௦  ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நுழைவுத் தேர்வின் அடிப்படையில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் வழங்கும் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும் நடப்பு கல்வி ஆண்டுக்கான ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் அதற்கான இணையதளத்தில் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்களை பல்கலைக்கழகத்தின் இணையதளம் முகவரியில் சென்று பார்க்கலாம்.மேலும் பட்டப்  படிப்புகளில் சேர தகுதியான பாடங்கள்  மற்றும் இதர தகவல்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் என் டி ஏ வின் இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தொடர்ந்து கண்காணித்து வரலாம்.

இந்த  விண்ணப்ப படிவத்தின் விவரங்களை வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 3ஆம் தேதி வரை திருத்தம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் உடனே விண்ணப்பிக்க வேண்டும் என தேசிய தேர்வு முகமை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.