இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட முக்கிய தகவல்! கோவையிலிருந்து இந்த பகுதிக்கு விமான சேவை இயக்கப்படும்!
கோவா மாநிலத்தை பொருத்தவரை பெரும்பாலான விமானங்கள் தெற்கு கோவாவில் அமைந்துள்ள பனாஜி விமான நிலையத்திற்கு இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வடக்கு கோவாவில் முன்பா என்ற இடத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் கோவையில் இருந்து வடக்கு கோவா நோபா பகுதிக்கு விமான சேவை இயக்கப்படுகிறது.
வாரந்தோறும் திங்கட்கிழமை வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவா சர்வதேச விமான நிலையத்திலிருந்து பகல் 1.10 மணிக்கு விமானம் புறப்பட்டு பகல் 2:30 மணிக்கு விமான புறப்படுகின்றது. மேலும் மூபாவிலிருந்து புறப்பட்டு பகல் 2.3௦ மணிக்கு கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருக்கிறது. அதனுடன் புதன்கிழமைகளில் மாலை 6:40 மணிக்கு கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானம் ஆனது புறப்படும்.
கோவாவிலிருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு கோவை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைகின்றது என விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் கோவையிலிருந்து வடக்கு கோவா, கோவா பகுதிக்கு விமான சேவை இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.