அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! பள்ளி ஆசிரியர்களின் கவனத்திற்கு!

0
308
important-information-released-by-the-government-attention-school-teachers
important-information-released-by-the-government-attention-school-teachers

அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! பள்ளி ஆசிரியர்களின் கவனத்திற்கு!

தமிழகத்தில் கடந்த முறை நடந்த தேர்தலின் பொழுது திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. அந்த வாக்குறுதிகளில் திமுக பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லா பயணம் சீட்டு வழங்குதல், எண்ணும் எழுத்தும் திட்டம், நான் முதல்வன் திட்டம் ,குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1௦௦௦ உரிமை தொகை வழங்குதல் போன்ற வாக்குறுதிகளை வழங்கியது. எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது.

அதனை தொடர்ந்து இந்த திட்டங்களை நடைமுறை படுத்தியது. இந்நிலையில் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் எண்ணும் எழுத்தும்  திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த வருடம் தொடங்கி வைத்தார்.

மேலும் இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் அடிப்படை எண்  மற்றும் எழுத்தறிவை தெளிவாக பிழையின்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற 2025 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் அடிப்படை எண் மற்றும் எழுத்தறிவை பெற வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்கு ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் நடப்பு கல்வி ஆண்டிற்கான முதல் பருவத்திற்கான பயிற்சி வகுப்புகள் வரும்  ஏப்ரல் ஐந்தாம் தேதி தொடங்க உள்ளது.

அதில் முதல் கட்டமாக தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களுக்கு மதுரை மாவட்டத்தில் மூன்று நாட்கள் பயிற்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அடுத்த மாதம் ஏப்ரல் பத்தாம் தேதி முதல் 12-ம் தேதி வரை மாவட்ட அளவிலான  எண்ணும் எழுத்தும் சார்ந்த தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடத்திற்கான கருத்தாளர் பயிற்சி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, ஒன்றிய அளவில் ஆசிரியர்களுக்கான பயிற்சியை ஏப்ரல் 24ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Previous articleமாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த தேதியில் இங்கு உள்ளூர் விடுமுறை!
Next articleதெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! பயணிகளின் கவனத்திற்கு  இங்கு இன்று ரயில் சேவை கிடையாது!