அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! பண்டிகை முடிந்தாலும் பொங்கல் பரிசினை இன்று பெற்றுக்கொள்ளலாம்!
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அரசு சார்பில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம் தான்.அந்த வகையில் கடந்த ஆண்டு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி சென்னை தலைமை செயலகத்தில் பொங்கல் பரிசு வழங்குவது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தபட்டது.அந்த ஆலோசனை கூட்டத்தில் பொங்கல் பரிசாக ரூ 1000 ரொக்க பணம்,பச்சரிசி,சர்க்கரை வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.
ஆனால் விவசாயிகள் தரப்பில் இருந்து பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெற வேண்டும் என கோரிக்கை எழுந்துவந்து.அந்த கோரிக்கையை ஏற்ற அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்படும் என அறிவித்தது.அதனை தொடர்ந்து அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.அதன் பிறகு ஜனவரி 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.பொங்கல் பரிசு டோக்கன் பெறாதவர்கள் மற்றும் வெளியூர்களில் இருப்பவர்கள் என அனைவரும் பொங்கல் பரிசினை பெற வேண்டும் என்பதற்காக கடந்த 13 ஆம் தேதி ரேஷன் கடைகள் வேலை நாளாக அறிவிக்கப்பட்டது.
அந்த வேலை நாளை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 16 ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.இந்நிலையில் ஜனவரி 15 தேதி முதல் தற்போது வரையிலும் 6 லட்சம் பேர் பொங்கல் பரிசினை பெறவில்லை என புள்ளி விவரம் குறிப்பிடுகிறது.அதனால் பொங்கல் பரிசினை பெறாதவர்கள் இன்று அவரவர்களின் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று பொங்கல் பரிசினை பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.