மாணவர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

0
121
Happy news for students! Today is a holiday only for schools!
Happy news for students! Today is a holiday only for schools!

மாணவர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது கொரோனா அச்சுறுத்தல் அதிகம் இருந்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பு வந்தனர்.

மேலும் பள்ளி,கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை கொண்டாடப்பட்டது,அதனை தொடர்ந்து மாண்டஸ் புயலின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அதுமட்டுமின்றி கடந்த டிசம்பர் மாதம் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வும்,கல்லூரிகளுக்கு செமஸ்டர் தேர்வும் நடத்தப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 2 ஆம் தேதி தான் விடுமுறை அனைத்தும் முடிந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் தொடங்கப்பட்டது.இந்நிலையில் புதுச்சேரி மாநில சுற்றுலாத்துறை மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாக சார்ப்பில் நான்கு நாட்கள் பொங்கல் விழா திருவிழாவை  கார்னிவெல் என்ற பெயரில் கொண்டாடப்படுகின்றது. மேலும் அந்த திருவிழாவின் மூன்றாவது நாளான நேற்று கால்நடைத்துறை சார்பில் குதிரை ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் காரைக்காலில் நடைபெற்று வரும் கார்னிவல் திருவிழாவின் காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக மற்றோரு நாள் பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

author avatar
Parthipan K