மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!!

Photo of author

By Rupa

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!!

Rupa

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!!

மருத்துவம் படிக்க விரும்பும் 12ஆம் வகுப்பு

மாணவர்களுக்கு ஓர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த அறிவிப்பை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கம் வெளியிட்டுள்ளது. மேலும் அந்த அறிவிப்பில் தற்போது 2023 முதல் 2024 ஆம் ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைகள் நடைபெற உள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கு சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்படுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனையடுத்து மருத்துவம் சார்ந்த அனைத்து படிப்புகளுக்கும் விண்ணப்பங்கள் பெறப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வேதியியல், இயற்பியல், உயிரியல் மற்றும் கணிதம் ஆகிய பாடப் பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

 

விண்ணப்பிக்கும் நாள் 19.06.2023

 

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

28.06.2023

 

இணையதள முகவரி tnmedicalselection.org அல்லது tnhealth.tn.gov.in

மேலும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் சேர விரும்புபவர்கள் மேல் உள்ள இணையதளம் முகவரியின் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவம் படிக்க விரும்புபவர்களை தமிழ்நாடு மருத்துவ இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது.