செல்லாமல் போன ரூ 2000!! வங்கியில் செலுத்தினால் மீண்டும் ஏடிஎம்மில் வருமா??

0
99
#image_title

செல்லாமல் போன ரூ 2000!! வங்கியில் செலுத்தினால் மீண்டும் ஏடிஎம்மில் வருமா??

கடந்த மாதம் 2000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதனால் 2000 நோட்டுகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் வங்கியில் மாற்றிக் கொள்ளவும் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

அப்போது வங்கியில் அந்த 2000 நோட்டுக்களை என்ன செய்வார்கள்?

சில ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளில் போலி நோட்டுக்களை கண்டுபிடித்து கரன்சி செஸ்டுக்கு அனுப்பி வைப்பர்.

கரன்சி செஸ்ட் என்பது வங்கியில் அளவுக்கு அதிகமாக உள்ள பணத்தை அதில் போடுவது ஆகும். அவர்கள் அதை ஆர்பிஐக்கு அனுப்பி வைப்பர்

இவ்வாறு தற்போது வந்துள்ள 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ள நிலையில் இதனால் மக்களுக்கு என்ன பாதிப்பு வரும் என்பதை பற்றி காண்போம்.

2000 ரூபாய் நோட்டுக்களை சில்லறை மாற்றுவதற்காக நாம் படாத பாடு படுகிறோம்.

தற்போது 2000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்து ஒருவேளை பத்தாயிரம் ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்தால் அதை சில்லறை முடிப்பது மக்களிடையே மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும்.

தற்போது 2000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்யப்பட்ட நிலையில் ஆர்பிஐ இனி இருந்த 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் டிஜிட்டல் ட்ரான்ஸாக்ஷன் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லவும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

இந்த டிஜிட்டல் கரன்சிக்காக ஈ- ரூப்பி என்ற செயலியை மக்கள் பயன்படுத்தலாம்.

ஆர்பிஐயின் பிரிவு 22 படி ரூபாய் நோட்டுகளை வங்கிகளுக்கு ஆர்பிஐ வழங்குவதற்கு முழு உரிமை உள்ளது.

இவ்வாறு வழங்கும் நோட்டுகளுக்கு உத்தரவாதம் கொடுப்பதற்கு ஆர்பிஐ யின் பிரிவு 26 இன் படி மத்திய அரசுக்கு முழு உரிமை உள்ளது.

மேலும் ஆர்பிஐயின் பிரிவு 26 இல் உள்ள துணை பிரிவு 2 ன்படி குறிப்பிட்ட ரூபாய் நோட்டுகளை பண மதிப்பிழப்பு செய்வதற்கு மத்திய அரசுக்கு உரிமை உள்ளது.

இந்த உரிமையை தடுக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது.

தற்போது 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மே 23 முதல் செப்டம்பர் 30 வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் 20 ஆயிரம் ரூபாய் வரை 2000 நோட்டுகளை நாம் மாற்றிக் கொள்ளலாம்.

தொழில் செய்யும் நபர்கள் 4000 ரூபாய் நோட்டுகள் வரை தினமும் மாற்றிக் கொள்ளலாம்.

செப்டம்பர் 30 க்கு பிறகு ஏற்கனவே இருந்த ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு அறிமுகப்படுத்துமா அல்லது 500 ரூபாய் நோட்டு வரை நிறுத்தி விடுமா என்பதை காத்திருந்து பார்ப்போம்.

author avatar
CineDesk