10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி இது பள்ளிகளில் ரத்து!
இரண்டு ஆண்டுகளை கடந்து தற்பொழுதுதான் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. கடந்த மாதம் 20ஆம் தேதி தான் பொது தேர்வின் முடிவுகள் வெளிவந்தது. குறிப்பாக 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் ,97% பேர் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ள் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பலர் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விரும்புவர்.அவ்வாறு பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு பள்ளி விட்டு செல்லும் மாணவர்களுக்கு அவரவர் பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யப்பட்டு வந்தது.
ஆனால் இதில் பல சிக்கல்கள் நிலவி வருவதால் தமிழக அரசு இதனை ரத்து செய்துள்ளது. இனிவரும் காலங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் ஆன்லைனில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். ஆன்லைனில் செய்ய முடியவில்லை என்றால் இ சேவை மையத்தில் சென்றும் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இ சேவை மையத்தில் கூடுதல் பதிவு, வேலை வாய்ப்பு சம்பந்தமாக புதுப்பித்தல் ஆகியவற்றையும் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் http://www.tnvelaivaaippu.gov.in என்று இணையத்திலும் பதிவு செய்து கொள்ளும் வசதியை ஏற்படுத்தி உள்ளனர்.