பக்தர்களுக்கு முக்கிய செய்தி!! இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!!
சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது.
கேரளாவில் உள்ள மிகவும் பிரபலமான கோவில் சபரிமலை ஐயப்பன். இந்த கோவிலுக்கு கேரளாவில் மட்டுமின்றி அருகில் உள்ள தமிழ்நாடு, கர்நாடகாவில் இருந்தும் கூட ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மாலை அணிந்து செல்வர். அந்த மாதங்களில் திறந்திருக்கும் கோவிலானது நடை சாத்தப்பட்டு மீண்டும் முக்கிய பூஜை அன்று மட்டும் திறக்கப்படும்.
இந்த நிலையில் ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நாட்டில் வறட்சி நீங்கி விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். அந்த வகையில் இந்த வருடத்திற்கான நிறை புத்தரிசி பூஜை நாளை 10ஆம் தேதி நடக்க இருக்கிறது.
இதன் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணி அளவில் திறக்கப்பட உள்ளது. மேலும் இந்த பூஜைக்கு தேவைப்படும் நெற்கதிர் கட்டுகள் அச்சன்கோவிலில் இருந்து ஊர்வலமாக இன்று எடுத்து வரப்பட உள்ளது. பட்டு வஸ்திரம் சுற்றப்பட்ட 51 நெற்கதிர் கட்டுகள் அலங்கரிக்கப்பட்ட திரு ஆபரண பெட்டி ஆகியவற்றை வாகனத்தில் ஏற்றி தேவசம் போர்டு அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
அதன் பின்னால் இந்த நெற்கதிர்கள் இன்று மாலை 3 மணி அளவில் பம்பை கணபதி கோவிலில் பூஜை செய்யப்பட்டு பின்னர் விரதம் கடைபிடித்து வரும் 51 பக்தர்கள் மூலமாக 51 நெற்கதிர் கட்டுகளும் சன்னிதானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு ஒப்படைக்கப்படும். அதன் பின்னால் பஞ்ச வாத்தியங்கள் முழக்கத்துடன் தேவசம்போர்டு அதிகாரிகள் அந்த நெற்கதிர்களை பெற்றுக் கொள்வார்கள்.
நெற்கதிர்களை பெற்றுக்கொண்ட பின்னர் நாளை காலை 5:45 மணி முதல் 6:15 மணி வரை நிறைப்புத்தரிசி பூஜையானது நடைபெறும். பூஜை நடை முடிந்ததும் பக்தர்களுக்கு பிரசாதமாக நிற்கதிர்கள் வழங்கப்படும். இந்த நிலையில் நிலை புத்தரிசி பூஜை முன்னிட்டு நாளை முழுவதும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதிலும் குறிப்பாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். பின்னர் இரவு 10 மணிக்கு கோவில் நடையானது சாத்தப்படும்.