சொந்த ஊர் திரும்பும் மக்களுக்கு முக்கிய செய்தி! எந்தெந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயங்கும்?
தீபாவளி சிறப்பு பேருந்துகள் எந்தெந்த பேருந்து நிறுத்தத்திலிருந்து எந்தெந்த ஊருக்கு செல்லும் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது போக்குவரத்து கழகம்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்து வசதியை அளித்துள்ளது.அதன்படி இன்று முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரை, சென்னையிலிருந்து வழக்கமாக செல்லும் 2100 பேருந்துகளுடன் 4218 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும்,பிற ஊர்களில் இருந்து 6,370 சிறப்பு பேருந்துகள் என தமிழ்நாடு முழுவதும் 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்திருந்தார்.
அதன்படி சென்னையில் இருந்து புறப்படும் சிறப்பு பேருந்துகள் எந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து எந்தெந்த ஊருக்கு செல்லும் என்ற பட்டியலையும் அண்மையில் வெளியிட்டுள்ளது போக்குவரத்து கழகம்.
மேலும் மேற்கண்ட பேருந்து நிலையத்திற்கு செல்ல,பொதுமக்களின் வசதிக்காக இன்றிலிருந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து 24 மணி நேரமும் மாநகர பேருந்துகள் இயக்கப்படுமென்று போக்குவரத்து கழகம் கூறியுள்ளது.
மேலும் இந்த பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் கார் மற்றும் இதர வாகனங்கள் தாம்பரம் பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து,திருப்போரூர்-செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர்-செங்கல்பட்டு வழியாக செல்லுமாறு போக்குவரத்து துறை கழகம் அறிவுறுத்தியுள்ளது.