TAMILNADU: தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழக மக்களுக்கு பல்வேறு இணையதள வசதிகளை அறித்துள்ளது.
மின்சார வாரியத்தில் இருந்து தமிழக மக்களுக்கு இன்ப செய்து ஒன்றை வெளியிட்டுள்ளது. மக்களுக்கு ஏற்படும் முக்கியமான பதிப்பு குறித்து மின்சார வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வீடுகளுக்கு அருகே உலா மின் கம்பங்களை மாற்ற வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
வெளியிட்டுள்ள அறிக்கையில் மின்சார வாரியம் வெளியிட்டுள்ள பதிவில் வீட்டின் அருகே உலா மின் கம்பங்களை அகற்ற வேண்டுமா? வீட்டின் மேல் செல்லும் மின் இணைப்பை மாற்றி அமைக்க மற்றும் உங்கள் மின்கம்பங்கள் மாற்றி அமைக்க இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இணையத்தில் https://app1.tangedco.org/nsconline/mobval.xhtml?apl=DCW3%E0%AE%90 என்ற இணையத்தின் வாயிலாக உங்கள் கோரிக்கைகளை முன் வைக்கலாம்.
வீட்டின் மேலே செல்லும் மின் கம்பிகள் மற்றும் வீட்டு நிலத்தில் உள்ள மின் கம்பங்கள் மாற்றியமைக்க இந்த இணையத்தளம் வாயிலாக தகவல் அளிக்கலாம் இதன் பின் உடனே TANGEDCO அதிகாரிகள் உங்களை தொடர்பு கொள்வார்கள் தொடர்பு கொண்டு உங்களுக்கு தேவையான பணிகளை செய்வார்கள்.
அதுமட்டுமின்றி தமிழ்நாடு மின்சார வாரியம் மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு 5௦௦ யூனிட்டுகளுக்கு மேலே உள்ள நுகர்வோருக்கு UPI வசதி மூலம் கட்டணம் செலுத்தும் வாட்ஸ் ஆப் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.