Google Chrome பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! இதனை மட்டும் தேடி விடாதீர்கள்!!

Photo of author

By Gayathri

Google chrome அல்லது google search இல் ஏதேனும் ஒன்றை தேடும் பொழுது இனிவரும் காலங்களில் இது கவனமாக இருக்க வேண்டும் என உலகில் உள்ள மக்களை எச்சரிக்கை செய்துள்ளனர். மேலும், இதில் குறிப்பாக சில வார்த்தைகளை google chrome-ல் டைப் செய்து தேடி விட வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google chrome மூலம் ஹாக்கிங் செய்யும் முறை தற்பொழுது அதிகரித்து உள்ளதால் பாதுகாப்பு காரணமாக உலகில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இது உலகில் உள்ள google chrome பயனர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.இணைய பயன்பாட்டாளர்கள் இனி கவனமாக அவர்களின் தேடல்களை தேட வேண்டும் என்று சைபர்செக்யூரிட்டி நிறுவனமான SOPHOS எச்சரித்துள்ளது. மேலும் கூகுளில் மக்கள் தேடவே கூடாத வார்த்தைகள் என்று சிலதையும் வெளியிட்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Google chrome-ல் மக்கள் தேடவே கூடாது வார்த்தைகள் :-

✓ ஹேக்கர்கள் 6 வார்த்தைகளை ஒன்றாக தேடும் பயனர்களை அதிகமாக குறிவைப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே ஆறு வார்த்தைகளைக் கொண்ட சொற்களை தேடும்பொழுது மிகுந்த கவனம் தேவை.

✓ ஆஸ்திரேலியா தொடர்பான வார்த்தைகள் மற்றும் ஆஸ்திரேலியா என்ற வார்த்தையை கூகுள் சர்ச்சில் தேடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியா தொடர்பான தகவல்களை தேடும் பயனர்கள் தான் அதிகமாக இந்த ஹேக்கிங் மோசடியில் சிக்கியுள்ளனர் என்று SOPHOS தெரிவித்துள்ளது.

✓ ” Are Bengal Cats legal in Australia?” என்ற வாக்கியத்தை மட்டும் விளையாட்டாக கூட தேடி விடக் கூடாது என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு டைப் செய்பவர்கள் நேரடியாக ஹேக்கர்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விடுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஹேக் செய்வதன் மூலம் நம்முடைய தகவல்கள் மற்றும் தரவுகளை நேரடியாக ஹேக்கர்கள் பெற்று விடுகின்றனர். இதனால் நம்முடைய அக்கவுண்டில் இருந்து பணங்கள் திருடப்படலாம். அல்லது நம்முடைய பர்சனல் டேட்டாவை எடுத்துக்கொண்டு நம்மிடம் பணம் கேட்டு மிரட்டும் அபாயமும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இனி நீங்கள் உங்களுடைய கூகுள் குரோம் – ஐ பயன்படுத்தும் போது கவனமாக பயன்படுத்தும் படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறீர்கள் என்பதனை ஒருபொழுதும் மறந்துவிடாதீர்கள்.