டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் கடைசி நாளான இன்று தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் மூலம் அரசு பணிகளுக்கு குரூப் 2 குரூப் 4 குரூப் 2A போன்ற தேர்வுகளின் மூலம் ஆட்களை பணி அமர்த்துகின்றனர்.
அந்த வகையில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30ஆம் தேதி வெளியானது. இதில் 6,244 காலிப் பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடந்தது. இந்த தேர்வில் கிராம நிர்வாக அலுவவர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான குரூப் 4 தேர்வு தமிழ்நாடு முழுவதும் ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது.
இதில், 20 லட்சம் பேர் விண்ணப்பித்து அவர்களில் 15.8 லட்சம் பேர் எழுதினர். இதனிடையே குரூப் 4 பணியிடங்களுக்கான எண்ணிக்கையை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.அதன்படி 480 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டது. இதன் மூலம் குரூப் 4 தேர்வில் மொத்தம் 6,724 காலிப்பணியிடங்களாக உயர்ந்தன. மேலும் கூடுதல் இடங்கள் சேர்க்கப்பட்டு மொத்தம் 9,491 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
தற்பொழுது குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு நவம்பர் 21 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது.தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என டிஎன்பிஎஸ்சி கேட்டுக் கொண்டுள்ளது. இன்று மாலை வரை நேரம் இருக்கிறது என்பதற்காக காத்திருக்காமல் உடனே பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.