மாநகரப் பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு! இனிமேல் இது கூடாது!

0
190

மாநகரப் பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு! இனிமேல் இது கூடாது! 

மாநகர பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி பேருந்துகளை ஓட்டுனர் தவிர வேறு யாரும் கட்டாயம் இயக்கக் கூடாது என்று அறிவித்தது.

மாநகரப் போக்குவரத்து கழகம் தனது சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,

நமது மாநகரப் போக்குவரத்து கழக கிளைகளில் ஒரு சில இடங்களில் நடத்துனர் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து பேருந்தினை இயக்குவதாக தெரியவந்துள்ளது. மத்திய பணிமனையில் ஓட்டுநருக்கு பதிலாக நடத்துனர் 28.1.2023 அன்று பேருந்தினை எடுத்து இயக்கி டீசல் பங்கினை இடித்து சேதப்படுத்திய நிகழ்வு இதனை உறுதி செய்கிறது.

எந்த சூழ்நிலையிலும்  பணிமனையின் உள்ளேயும் வெளியேயும் ஓட்டுநரை தவிர மற்றவர்கள் பேருந்தினை கட்டாயம் இயக்கக் கூடாது. இதனை கிளை மேலாளர்கள் மற்றும் பணியில் உள்ள மேற்பார்வையாளர்கள் கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் ஏற்படாமல் தடுக்க வேண்டும்.

இந்த அறிக்கையினை கிளை மேலாளர்கள் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் அனைவரும் அறியும் வண்ணம் பணிமனையின் தகவல் பலகையில் ஒட்டவும். மேலும் தொடர் முயற்சியாக பயிற்சி பள்ளிக்கு வரும் அனைவருக்கும் இதனை தெரியப்படுத்த வேண்டும். என்று அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous articleகுழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் புதிய மாற்றம்! முதல் கட்டமாக இரண்டு மாவட்டங்களில் நடைமுறை!
Next articleதானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம்! மீண்டும் சென்னை ரயில் நிலையங்களில் அறிமுகம்!