ஆவின் நுகர்வோர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! இனி ஆன்லைன் பேமென்ட் முறையில் மாதாந்திர பால் அட்டை!!

0
97
Important Notice to Aavin Consumers!! Now monthly milk card in online payment mode!!
Important Notice to Aavin Consumers!! Now monthly milk card in online payment mode!!

வருகிற புத்தாண்டு 2025 ஆம் ஆண்டு முதல் பெரும்பாலான துறைகளில் பல்வேறு விதமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ஆவின் நிறுவனமானது ரொக்க பரிவர்த்தனையிலிருந்து ஆன்லைன் பரிவர்த்தனைகளை ஜனவரி 1, 2025 முதல் துவங்க இருப்பதாக அறிவித்திருக்கிறது.

இந்த Online Milk Card Purchase System ஐ பால் நுகர்வோர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறும் ஆவின் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பணம் செலுத்துவதற்கு UPI Payment, Debit, Credit Card, Net Banking போன்றவற்றை பயன்படுத்தலாம் என்றும் இவ்வாறு பயன்படுத்துபவர்களுக்கு சலுகை விலையில் மாதாந்திர பால் அட்டை கிடைக்கும் என்றும், இந்த பால் அட்டைகளை ஜனவரி 1 முதல் ஆவின் ஆர்.எஸ்.புரம் விற்பனை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தி இருக்கின்றனர்.

நுகர்வோர்களுக்கான முக்கிய அறிவிப்பு :-

சில சமயங்களில் இணைய வழி சிக்னல் கோளாரு காரணமாக பணம் செலுத்துவதில் ஏற்படும் சிரம்மங்களை தவிர்க்க தங்களின் மூன்றுநாள் தேவைப் பட்டியலுக்கான தொகையை முன்கூட்டியே செலுத்துபவர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பால்வினியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாக, முகவர்கள் தங்களுடைய உரிமத்தினை ஆவின் நிர்வாகம் நிர்ணயம் செய்த ரூ.5000.00 காப்புத் தொகையை செலுத்தி முகவர் உரிமத்தினை 31.12.2024க்குள் புதுப்பித்துக் கொள்ளும்படியும் தேவைப் பட்டியலுக்கான தொகையை ரொக்கமாக செலுத்துவதை பால் முகவர்கள் 01.01.2025 முதல் முற்றிலும் தவிர்க்கும்படியும் ஆவின் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleWhatsapp இல் ChatGPT!! இனி கூகுள், ஆன்லைன் எதுவும் தேவையில்லை.. இது ஒன்னு மட்டும் போதும்!!
Next articleபட்டா மாற்றத்திற்கு இனி தாசில்தார் ஆபீஸ்க்கு செல்ல தேவையில்லை!! எல்லாமே ஆன்லைனில்..