கள்ள நோட்டுக்களை கட்டுப்படுத்த இந்தியன் ரிசர்வ் பேங்க் வெளியிட்ட முக்கிய உத்தரவு!!

Photo of author

By Gayathri

இந்தியாவில் நாளுக்கு நாள் 500 ரூபாய் தாளின் கள்ள நோட்டு பழக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஆர்பிஐ சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மேலும் இதனை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இந்திய நாட்டின் கரன்சி முறையை வலுப்படுத்தும் வகையில் இந்தியன் ரிசர்வ் பேங்க் 500 ரூபாய் நோட்டுகள் தொடர்பான வழிகாட்டுதல்களின் முக்கிய நோக்கமாக போலி ரூபாய் நோட்டுகளை தடுத்து பொதுமக்களை நிதி மோசடியில் இருந்து பாதுகாப்பதே என்று குறிப்பிட்டு இருக்கிறது.

500 ரூபாய் நோட்டின் பாதுகாப்பு அம்சங்கள் :-

500 ரூபாய் நோட்டில் சில முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இதில் முதல் மற்றும் முக்கிய அம்சமாக ரூபாய் நோட்டில் உள்ளமைக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு நூல் ஆகும். இதனை கண்டறிய, ரூபாய் நோட்டினை ஒரு கோணத்தில் சாய்த்து பார்க்கும் பொழுது பச்சை நிறமாகவும் மறுகோணத்தில் நீல நிறமாகவும் காட்சியளிக்கும். இதனை போலி ரூபாய் நோட்டுகளில் பின்பற்றுவது சாத்திய மற்றது என கூறியுள்ளது.

அடுத்ததாக மகாத்மா காந்தியின் வாட்டர் மார்க் ஒரு மிக முக்கியமான பாதுகாப்பு அம்சம் என்றும் தெரிவித்து இருக்கிறது. ரூபாய் நோட்டினை வெளிச்சமான இடத்தில் வைத்து பார்க்கும் பொழுது இந்த வாட்டர் மார்க் தெளிவாக தெரியும் என்றும் அதன் தரம் உயர் மட்டத்தில் இருக்கிறது, இதைப் போன்று போலிகளால் நகலெடுக்க முடியாது என்றும் ஆர்பிஐ தெரிவித்து இருக்கிறது.

மைக்ரோ பிரிண்டிங்கும் ரூபாய் நோட்டை கள்ள நோட்டு இல்லை என்று அறிய ஒரு முக்கிய பாதுகாப்பு அம்சமாக விளங்குகிறது என்று கூறலாம். நோட்டில் பாரத் மற்றும் இந்தியா என்ற வார்த்தைகள் மிக நுண்ணிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ளன. இதனை பூதக்கண்ணாடியின் உதவியுடன் மட்டுமே பார்க்க முடியும் என்றும் போலி ரூபாய் நோட்டுகளில் இவ்வளவு துல்லியமான அச்சிடுதல் இருக்காது எனவும் ஆர்வையை தெரிவித்திருக்கிறது.

எனவே உங்களிடம் 500 ரூபாய் நோட்டுகள் இருப்பின் அது நல்ல நோட்டா அல்லது கள்ள நோட்டா என நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.