ஓபிஎஸ் யின் வலதுகரத்துக்கு திமுகவில் முக்கிய பதவி! மேலும் பலருக்கு வலை!!

Photo of author

By Vijay

ஓபிஎஸ் யின் வலதுகரத்துக்கு திமுகவில் முக்கிய பதவி! மேலும் பலருக்கு வலை!!

Vijay

ஓபிஎஸ் யின் வலதுகரத்துக்கு திமுகவில் முக்கிய பதவி! மேலும் பலருக்கு வலை

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை உருவெடுத்த உடன் எடப்பாடி மற்றும் பன்னீர் இடையே மோதல் போக்கு அதிகரிக்க தொடங்கியது, இதனை அடுத்து பொதுக்குழு சம்பந்தமாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் இரு குழுக்களாக பிரிந்து செயல்பட்டு வந்த நிலையில், ஓபிஎஸ் யின் வலது கரமாக செயல்பட்டு வந்த கோவை செல்வராஜ் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்தார்.

பொதுக்குழு தொடர்பாக நீதிமன்ற விசாரணையின் போது எடப்பாடி மற்றும் அவரது அணியை ஓபிஎஸ் ஆதரவோடு விளாசிய செல்வராஜ், அதன் பின்னர் நாட்கள் செல்ல செல்ல அவரது நடவடிக்கைகள் பிடிக்காத காரணத்தால் அவரையே விமர்சனம் செய்து அவரிடம் இருந்து விலகி, திமுக கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் தனது ஆதரவாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் கடந்த டிசம்பர் மாதம் ஐக்கியம் ஆனார்.

திமுகவில் இருந்து விலகி நான்கு மாதம் ஆகியும் எந்த பதவியும் தராமல் வெறும் பொம்மையாக வைத்திருந்த கோவை செல்வராஜுக்கு திமுகவின் துணை செய்தி தொடர்பாளர் என்ற பதவி தற்போது ஸ்டாலின் அனுமதியோடு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் எடப்பாடி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகியோர் மீது அதிருப்தியில் உள்ள நபர்களை திமுகவிற்கு அழைத்து வரும் பொறுப்பை செல்வராஜிடம் ஒப்படைத்து உள்ளதாகவும், அதற்கான வேலைகளை பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையிலான குழுவினர் செய்து வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.