தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் முக்கிய கட்டுப்பாடுகளுடன் கூடிய சுற்றறிக்கை ஒன்றை பள்ளிக்கல்வித்துறை அனுப்பி இருக்கிறது. அதன் அரசு பள்ளிகளில் சில முக்கிய கட்டுப்பாடுகள் இனிவரும் காலங்களில் பின்பற்றப்பட வேண்டும் என்றும் மீறினால் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆசிரியர்கள் அதன் அரசு பள்ளிகளில் சில முக்கிய கட்டுப்பாடுகள் இனிவரும் காலங்களில் பின்பற்றப்பட வேண்டும் என்றும் மீறினால் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்றவர்கள் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
பள்ளிக்கல்வித்துறையை தரப்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-
இனிவரும் காலங்களில் அரசு பள்ளிகளில் சினிமா பாடல்கள் மற்றும் ஜாதியை குறிப்பிடுவது போன்ற சின்னங்கள் இடம்பெறுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் இதனை மீறி ஏதேனும் அரசு பள்ளிகளில் இவை பின்பற்றப்படவில்லை என்றால் நேரடியாக அந்த அரசு பள்ளிகளின் உடைய தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
தலைமை ஆசிரியர்கள் மட்டுமின்றி இந்த மாதிரியான குற்றங்களில் நேரடியாக ஈடுபடக்கூடிய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் போன்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை தயங்காத என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இனி ஆண்டு விழாக்களில் கூட சினிமா பாடல்கள் இடம் பெறுவதில் மிகப்பெரிய கட்டுப்பாடுகள் இருக்கும் எனவும் பள்ளி வளாகத்திற்குள் சாதியை குறிப்பிடக்கூடிய எந்த ஒரு செயல்களும் பொருட்களும் இடம்பெறக்கூடாது என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.