தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மாற்றுத் திறனாளிகளுக்கான பேருந்து பயணத்தின் போது சில புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது.
ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கக்கூடிய சூழ்நிலையில் அவற்றை ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சரியாக பின்பற்றவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து மீண்டும் வருக திறனாளிகள் பயணம் செய்யும்பொழுது ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த புதிய விதிமுறைகளை அரசு வெளியிட்டிருக்கிறது.
தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிடப்பட்ட புதிய வழிமுறைகள் :-
✓ மாற்றுத்திறனாளி பயணிகள் பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் பட்சத்தில் அவர்களை முறையாக ஏற்றி செல்ல வேண்டும்.
✓ பேருந்தில் இடமில்லை என்று சொல்லி அவர்களை பாதியில் இறக்கி விடுவதோ அல்லது பேருந்தில் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதோ தண்டனைக்குரிய விஷயம்
✓ ஓட்டுனர் பேருந்து நிறுத்தத்தில் சரியாக பேருந்து நிறுத்த வேண்டும் அதற்கு மாறாக பேருந்து நிறுத்தத்திற்கு முன்பாகவோ அல்லது பின் பாகவோ தள்ளி நிறுத்தவும் கூடாது
✓ மாற்றுத்திறனாளிகள் அமர்வதற்கான இருக்கைக்குமே ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்க வேண்டும்.அதனை சுட்டிக்காட்டி அதில் அவரை அமர வைத்து அழைத்துச் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
✓ மாற்றுத்திறனாளிகளை அவர்களுடைய இருக்கையில் அமர செய்த பின் அவர்களிடம் கனியுடன் பயண சீட்டுகள் வழங்க வேண்டும் என்றும் இறங்க வேண்டிய இடத்தில் பேருந்து நிறுத்தி மனிதாபிமான அடிப்படையில் நடத்துனர் உதவியுடன் அவர்களை இறக்கி விட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
✓ சாதாரண பயணிகள் மாற்றுத்திறனாளிகளின் உடைய இருக்கையில் அமரும்பொழுது அவர்களிடம் பணிவுடன் மாற்றுத்திறனாளிகளின் இருக்கை எனக் கூறி அனைவரிடமும் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
✓ பேருந்தில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளை கனிவுடன் அன்புடனும் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
✓ மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய தேசிய அடையாள அசல் அட்டை கொண்டு வரக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் எல்லா பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.