நமது சிறுநீர் பாதையில் கற்கள் உருவாகி சிறுநீர் வெளியேற்றுவதை கடினமாக்கும்.இதை கிட்னி ஸ்டோன் என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றோம்.இந்த சிறுநீரக கல் பாதிப்பு எந்த வயதினருக்கும் வரலாம்.இதன் ஆரம்ப கட்டத்தில் அறிந்து தகுந்த மருத்துவ சிகிச்சையை பெற்றுக் கொள்ளவில்லை என்றால் கல்லின் அளவு அதிகரித்து சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்திவிடும்.சிறுநீரக கல் பிரச்சனை தீவிரமானால் அந்த உறுப்பையே அகற்ற வேண்டிய நிலை ஏற்படும்.
சிறுநீரக கல் அறிகுறிகள்:-
**சிறுநீரை வெளியேற்றும் போது வலி ஏற்படுதல்
**சிறுநீர் கழிக்கும் பொழுது அசௌகரிய சூழல் ஏற்படுதல்
**குமட்டல் பிரச்சனை
**வாந்தி உணர்வு
**அடிவயிற்று அல்லை வலி
**இரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறுதல்
**சிறுநீர் வெளியேற்றும் பொழுது எரிச்சல் உண்டாதல்
**நுரைத்த சிறுநீர் வெளியேறுதல்
**அவசரமாக சிறுநீர் வெளியேற்றுதல்
**இரவு நேரத்தில் அதிக சிறுநீர் வெளியேறுதல்
**மேல் முதுகு வலி
**துர்நாற்றத்துடன் சிறுநீர் வருதல்
சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்:
1)நீங்கள் மருத்துவரிடம் சென்றால் அவர்கள் சொல்லும் முதல் அறிவுரை தண்ணீர் பருக வேண்டும் என்பது தான்.உடலுக்கு தேவையான தண்ணீர் பருகுவதன் மூலம் சிறுநீரகத்தில் படியும் கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேறும்.நாம் அதிகளவு தண்ணீர் குடித்தால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைந்து சிறுநீரில் வெளியேறிவிடும்.
2)உங்களுக்கு சிறுநீரக கல் பிரச்சனை தீவிரமாகிவிட்டால் தகுந்த சிகிச்சை மூலம் கற்களை உடைத்து எடுக்க வேண்டி இருக்கும்.இது மட்டுமே சிறுநீரக கற்களை வெளியேற்ற ஆங்கில மருத்துவத்தில் உள்ள வழிகள்.
3)நாம் இயற்கையான முறையில் சில விஷயங்களை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் கற்களை எளிதில் கரைத்துவிடலாம்.ரணகள்ளி ஜூஸ்,வாழைத்தண்டு ஜூஸ்,பீன்ஸ் கொதிக்க வைத்த தண்ணீர்,சிறுகன்பீளை பானம் போன்றவற்றை பருகுவதன் மூலம் சிறுநீரக கற்களை எளிதில் கரைத்து வெளியேற்றிவிடலாம்.
4)உங்களுக்கு சிறுநீர் வந்தால் அடக்கி வைப்பதை முதலில் தவிர்க்க வேண்டும்.எப்பொழுது சிறுநீர் வந்தாலும் அதை முதலில் வெளியற்றிவிட வேண்டும்.சிறுநீரை அடக்கி வைப்பதால் கற்கள் உருவாகும்.