30 வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடுபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!!

Photo of author

By Divya

30 வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடுபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!!

Divya

கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் பெண்களுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்தனர்.பள்ளி செல்லும் வயதில் குழந்தை பெற்று வளர்த்தனர்.ஆனால் தற்பொழுது நிலைமை மாறிவிட்டது.பெண்கள் படிப்பு,வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் சீக்கிரம் திருமணம் செய்து கொள்வதற்கான விருப்பம் அவர்களிடம் குறைந்து வருகிறது.ஒருவேளை 25,26 வயதில் திருமணம் செய்தாலும் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளி வைக்கின்றனர்.

30 வயதை கடந்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடுகின்றனர்.இப்படி வயது கடந்த பிறகு குழந்தைக்கு திட்டமிடும் தம்பதிகள் சில விஷயங்களை நிச்சயம் கவனிக்க வேண்டும்.சில பெண்கள் 35 வயதை கடந்த பிறகு கருவுறுதலுக்கு திட்டமிடுகின்றனர்.இப்படி குழந்தைக்கு திட்டமிடுவதை காலம் தாமதம் செய்யும் தம்பதிகள் சில விஷயங்களை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

30,35 வயதை கடந்த பெண்களுக்கு இரத்த அழுத்தம்,ஹார்மோன் குறைபாடு போன்ற காரணங்களால் எளிதில் கருவுற முடியாமல் போகும்.வயது கடந்த பின்னர் கருத்தரித்தலுக்கு திட்டமிடும் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.

30 வயதை கடந்த தம்பதிகள் கருவுறுதலுக்கு திட்டமிடும் முன்பு சில விஷயங்களை கவனியுங்கள்.உங்கள் உடல் எடையை பராமரிக்க வேண்டியது முக்கியம்.சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.

ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களை கொண்டிருக்க வேண்டும்.பெண்கள் கருப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை சாப்பிட வேண்டும்.ஆண்கள் விந்தணு தரத்தை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும்.உடலை அதிக வெப்பமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.நல்ல தூக்கத்தை அனுபவிக்க வேண்டும்.அதேபோல் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும்.

30 வயதை கடந்தவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டால் மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.