ஒவ்வொரு விதமான மரங்களும் நமக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பல நன்மைகளை தருகிறது அந்த வகையில் இந்த 10 மரங்களை வீட்டை சுற்றியும் வையுங்கள் உங்களுக்கு எந்தவிதமான நோயும் வராது. நீங்கள் ஒரு நாள் கூட பசியோடு உறங்க மாட்டீர்கள்
வேப்பமரம் : வீட்டின் முன்பு அவசியம் ஒரு வேப்ப மரம் இருக்க வேண்டும் இது நமக்கு குளிர்ச்சியை தருவதோடு அதிக ஆக்சிஜனையும் நம்ம உடலுக்கு தருகிறது.மேலும் பல பிணிகளுக்கு அரு மருந்தாக பயன்படுகிறது.

முருங்கை மரம் : வேப்பமரத்தின் பக்கத்தில் ஒரு முருங்கை மரம் வைக்க வேண்டும் இதன் இலை, பூ, கனி அனைத்தும் உணவுக்கு பயன்படும் எல்லாவிதமான காலகட்டத்திலும் கிடைப்பதால் உணவுக்கு பஞ்சம் இருக்காது.

வாழை மரம் : குளிக்கும் இடத்தில் வாழை மரம் வைக்க வேண்டும். குளிக்கும் தண்ணீரால் அந்த இடத்தில் மண்ணின் தன்மை கெடும்.மண்ணின் தன்மை கெடாமல் இருக்க வாழைமரம் தண்ணீர் சுத்திகரிப்பு செய்வதோடு அதன் இலைகள் மற்றும் பழங்கள் நமக்கு பல நன்மைகளை அளிக்கின்றன.

தென்னை மரம் : பாத்திரம் கழுவும் தண்ணீர் போகும் இடத்தில் தென்னை மரம் வைக்க வேண்டும்.பிள்ளை பெற்றவுடன் தென்னம்பிள்ளை வையுங்கள் 18 வருடங்களில் உங்களுக்கு சோறு போடும் என்று பெரியவர்கள் கூறுவார்.இதன் வேரிலிருந்து நுனிவரை அனைத்தும் மனிதர்களுக்கு பயன்படுகிறது.

எலுமிச்சை மரம் : வீட்டில் எலுமிச்சை மரம் வைப்பதால் எந்த தீய சக்தியும் அண்டாது மற்றும் எலுமிச்சை கனிகள் உணவுக்கும்
தெய்வீகதீர்க்கும் பெரிதும் பயன்படுகிறது. இதுவும் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது.

கருவேப்பிலை மரம் : எலுமிச்சை. மரத்தினடியில் ஒரு கருவேப்பிலை மரம் வையுங்கள். இந்த கருவேப்பிலை கண்கள் மற்றும் முடி வளர்ச்சிக்கு மருந்தாக பயன்படுகிறது.

நெல்லி மரம் : ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் நெல்லிமரம் இருக்கவேண்டும். இந்த நெல்லிக்காயில் வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும். இதனால் எந்த நோயும் உங்களை அண்டாது.

சீதா மரம் : வீட்டைச் சுற்றிலும் சீதா மரம் ஒன்று அல்லது 2 சீதா மரங்கள் ஆவது இருக்க வேண்டும். ஏனெனில் இது வாஸ்து செடியாகவும் மற்றும் இதன் பழங்கள் சத்து அதிகம் நிறைந்துள்ளது.

பப்பாளி மரம் : வீட்டில் அவசியம் ஒரு பப்பாளி மரம் இருக்க வேண்டும் ஏனெனில் இதன் கனி மட்டுமல்லாமல் இதன் இலையின் சாறு மிகவும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது இது பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.எனவே பப்பாளி மரம் வீட்டில் கட்டாயமாக இருக்கவேண்டும்.

மாமரம் : வீட்டில் ஒரு மாமரம் வைத்தால் காசு பிரச்சினைகள் இருக்காது.மற்றும் இதன் கனிகள் பல சத்துக்களை உள்ளடக்கியது.இதன் இலைகள் தெய்வீகத்தன்மை வாய்ந்தது.
