ரத்து செய்யப்பட்ட ரயில்கள் – முன்பதிவு செய்த டிக்கட் கட்டணத்தை பெற தேதி அறிவிப்பு

0
50

இந்தியாவில் சுமார் 90 நாட்களுக்கு முன்னர் ரயில் டிக்கட்டுகளை முன் பதிவு செய்து கொள்ள முடியும். இந்திய ரயில் துறையை பொருத்த வரை எப்போதுமே ரயில் டிக்கடுகளுக்கு கிராக்கி அதிகம். அதன் காரணமாகவே தட்கல், ப்ரீமியம் தட்கல் போன்ற முன்பதிவு முறை நடைமுறையில் உள்ளது.

அதுவும் கோடை விடுமுறை காலமான மார்ச் இறுதி வாரத்திலிருந்து மே இறுதி வாரம் வரை ரயில்களில் டிக்கட் கிடைப்பது என்பது பெரும் பாடு. மார்ச் முதல் தேதி வரை கூட பொதுமக்கள் கொரோனா இப்படி ஒரு விஸ்வரூபம் எடுத்து நாட்டையே முடக்கி போடும் என நினைத்திருக்க மாட்டார்கள். இந்திய ரயில்வே அறிமுகம் செய்யப்பட்டு நாடு தழுவிய அளவில் இவ்வளவு நாட்கள் ரயில்கள் ஓடாமல் இருந்ததாக வரலாற்றிலேயே கிடையாது.

யாரும் எதிர்பாராத ஊரடங்கு உத்தரவால், மார்ச் 22-ம் தேதி முதல்
அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் மே 31ம் தேதி அனைத்து பொது ரயில்களும் ரத்து செய்யப்பட்டன். நேற்று முதல் 100 ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மே 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு இணையத்தில் டிக்கட் முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு ஏற்கனவே அவர்கள் பணம் நேரடியாக அவர்கள் எதன் மூலம் கட்டணம் செலுத்தினார்களோ அதற்குப் பணம் திருப்பியளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேரில் சென்று முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டுக்கு முழுகட்டணத்தையும் திரும்ப பெற திருச்சி ரயில்வே கோட்டம் சார்பில் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி மார்ச் 22ஆம் தேதி முதல் ஜூன் 30-ம்தேதி வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, அரியலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் பயண கட்டணத்தை கீழ்கண்ட தேதிகளில் சென்று பெற்று கொள்ளலாம்

முன்பதிவு செய்த தேதி திரும்ப பெறும் தேதி

  • 22.03.2020 to 31.03.2020 – ஜூன் 1ஆம் தேதி முதல்
  • 01.04.2020 to 14.04.2020 – ஜூன் 6ஆம் தேதி முதல்
  • 15.04.2020 to 30.04.2020 – ஜூன் 11ஆம் தேதி முதல்
  • 01.05.2020 to 15.05.2020 – ஜூன் 16ஆம் தேதி முதல்
  • 16.05.2020 to 31.05.2020 – ஜூன் 21ஆம் தேதி முதல்
  • 01.06.2020 to 30.05.2020 – ஜூன் 26ஆம் தேதி முதல்

author avatar
Parthipan K