இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்கும் ஹிந்தி திணிப்பு!! தலைமை செயலகத்திலிருந்து பிரதமருக்கு பறந்த அவசர கடிதம்!!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மத்திய அரசு நடத்தும் நிறுவனங்களான ஐஐடி ஐஏஎஸ் போன்ற பல்கலைக்கழகங்களில் இந்தியை கட்டாயம் ஆக்குவது குறித்து பரிந்துரைத்துள்ளனர். அதுமட்டுமின்றி மத்திய அரசு நடத்தும் வேலை வாய்ப்புகளில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு ஹிந்தியை மட்டும் போட்டு தேர்வுகளில் வைக்க பரிந்துரைத்துள்ளனர். இதனால் அவர்கள் மாநிலத்தை தவிர இதர மாநில இளைஞர்களால் வேலைவாய்ப்பை பெற இயலாது. இது குறித்த நேற்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதனை அடுத்து இன்று மு க ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஹிந்தியை திணிக்கும் முயற்சியை கைவிட்டு இந்திய ஒற்றுமை சுடரை தொடர்ந்து ஒளி செய்ய வேண்டுமென வலியுறுத்துவதாக கூறியுள்ளார்.
I appeal to the Hon. @PMOIndia to take stock of the reasonable fear & discontent among the non-hindi speaking states following the aggressive attempts of the Union Govt to impose Hindi by all possible avenues. These are against the federal principles of our constitution. 1/2 pic.twitter.com/bhG5KSwke4
— M.K.Stalin (@mkstalin) October 16, 2022
மத்திய அரசு ஹிந்தியை திணித்தால் இந்தியாவின் ஒற்றுமையே சிதைந்து போகும்.அதனால் மத்திய அரசு பரிந்துரைத்துள்ள மொழிக்கான நடைமுறையை கைவிட வேண்டும்.அதுமட்டுமின்றி இது நடைமுறைக்கு வருமாயின் அந்த மாநில மக்கள் மட்டுமே பயனடையும் வகையில் காணப்படும்.