கண் பார்வை திறனை மேம்படுத்த கேரட்டை உணவாக சாப்பிடலாம்.வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை திறன் மேம்படும்.கண் எரிச்சல்,கண் நமைச்சல்,கண் சூடு தணிய இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஜூஸ் செய்து பருகலாம்.
தேவையான பொருட்கள்:-
1)கேரட் – ஒன்று
2)நெல்லிக்காய் – ஒன்று
3)கறிவேப்பிலை – ஒரு கொத்து
4)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
படி 01:
முதலில் ஒரு முழு கேரட்டை எடுத்து தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
படி 02:
பின்னர் ஒரு முழு நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் விதையை மட்டும் நீக்கிவிட வேண்டும்.
படி 03:
பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலையை தண்ணீர்விட்டு அலசி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
படி 04:
பின்னர் ஒரு எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாற்றை பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.இப்பொழுது மிக்சர் ஜார் எடுத்து அதில் கேரட் துண்டுகளை போட்டுக் கொள்ள வேண்டும்.
பின்னர் நறுக்கிய நெல்லிகாய் துண்டுகளை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு கொத்து கறிவேப்பிலையை அதில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைக்க வேண்டும்.
இந்த ஜூஸை கிளாஸிற்கு வடிகட்டி எலுமிச்சை சாறை அதில் பிழிந்து பருகினால் கண் பார்வை திறன் அதிகரிக்கும்.கண் எரிச்சல்,கண் வீக்கம்,கண் நமைச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)கேரட் – ஒன்று
2)பாதாம் பருப்பு – நான்கு
3)தேங்காய் துருவல் – அரை கப்
4)பனங்கற்கண்டு – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
படி 01:
முதலில் ஒரு முழு கேரட்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து நான்கு பாதாம் பருப்பு எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
படி 02:
பிறகு தேங்காய் துருவலை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும்.அடுத்து நறுக்கிய கேரட் துண்டுகள்,பாதாம் பருப்பு மற்றும் பனங்கற்கண்டு ஆகியவற்றை போட்டு ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த ஜூஸை குடித்து வந்தால் கண் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.கேரட்டில் இருக்கின்ற வைட்டமின் ஏ கண் பார்வை திறனை அதிகரிக்கும்.