இந்த ஒரு கிளாஸ் போதும்! 10 நிமிடத்தில் அஜீரணம், நெஞ்சு எரிச்சல், வாயுத்தொல்லை சரியாகும்!

0
185

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அன்றாடம் நம் தவறான உணவுப் பழக்கத்தினால் அஜீரணக் கோளாறுகள் ஏற்பட்டு விடுகின்றன. இன்றைய காலங்களில் வெளியே உணவுகளை வாங்கி சாப்பிடுவதால் அதிகமான அஜீரணக் கோளாறுகள் ஏற்பட்டு விடுகின்றன. எனவே அஜீரண கோளாறு, நெஞ்சு எரிச்சல் ஆகியவற்றை நீக்க கூடிய அற்புதமான வீட்டு வைத்தியத்தை பார்க்கலாம்!

தேவையான பொருட்கள்:

1. சீரகம் கால் டீஸ்பூன்

2. மிளகு 6

3. ஏலக்காய்-2

4. பச்சை கற்பூரம் சிறிதளவு

5. பனங்கற்கண்டு 2 ஸ்பூன்.

செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும்.

2. அதை அடுப்பில் வைத்து கால் டீஸ்பூன் சீரகத்தை சேர்க்கவும்.

3. 6 மிளகு மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை உரலில் இடித்து பொடியாக்கி கொள்ளவும்.

4. இந்த பொடியை தண்ணீரில் போடவும்.பின் பச்சை கற்பூரத்தை சிறிதளவு போடவும்.

5. 5 நிமிடம் தண்ணீர் நன்கு கொதிக்கவிட்டு கலர் மாறிய பின் அடுப்பை அணைத்து விடவும்.

6. இது ஒரு டம்ளரில் வடிகட்டி கொள்ளவும்.

7. பிறகு இரண்டு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து கலந்து குடிக்கவும்.

எப்பொழுது உங்களுக்கு அஜீரணக் கோளாறு ஏற்படுகின்றதோ அப்பொழுது இதை உடனடியாக செய்து குடிக்கும் பொழுது உங்களுக்கு  ஏப்பம் போல் வெளியேவந்துவிடும்.

நீங்கள் இதை எப்பொழுது வேண்டுமானாலும்  குடிக்கலாம். உடனடி தீர்வாக இருக்கும்.

Previous articleதாறுமாறான சாதனை படைத்த ரௌடி பேபி பாடல்.. உச்சகட்ட குஷியில் படக்குழு!
Next articleதினமும் ஒரு ஸ்பூன் தடவுங்க போதும்! உங்க முகம் பளிச்சென்று மாறிவிடும்!