10 நிமிடத்தில் வாயு தொல்லை அடியோடு நீங்கிவிடும்!! ஓமத்தை இப்படி பயன்படுத்துங்கள்!!

Photo of author

By Rupa

10 நிமிடத்தில் வாயு தொல்லை அடியோடு நீங்கிவிடும்!! ஓமத்தை இப்படி பயன்படுத்துங்கள்!!

வாயு தொல்லையானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் சந்தித்து வரும் ஒரு பிரச்சனை தான். இதற்கு முக்கிய காரணம் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு தான். வாயு நிறைந்த பொருட்களை அதிகளவு எடுத்துக் கொள்ளும் பொழுது நமக்கு வாயு சம்பந்தப்பட்ட பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். சிறியவர்களை காட்டிலும் பெரியவர்கள் தான் இதனை பெரும்பாலும் சந்திக்கின்றனர். இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் பத்து நிமிடத்தில் உடம்பில் இருக்கும் வாயு அனைத்தும் வெளியேறிவிடும்.

ஒரு சில வாயுவானது இடுப்பு தண்டுவடம் போன்ற பகுதிகளில் பிடித்துக் கொள்ளும். இந்த பிரச்சனையால் மூச்சு கூட சரிவர விட முடியாமல் அவதிப்படுவர். இவற்றிலிருந்து விடுபட இந்த பதிவில் வருவதை பின்பற்றினாலே போதும்.

வாயு தொல்லையை சரி செய்யும் எளிய வீட்டு வைத்தியம்:

தேவையான பொருட்கள்:

ஓமம்

சீரகம்

வெந்தயம்

ஓமம் மற்றும் சீரகம் இவை இரண்டும் செரிமான பிரச்சனையை சீர் செய்யும்.
வெந்தயம் நமது உடலில் இருக்கும் சூட்டை குறைக்க உதவும்.

செய்முறை:

ஓமம் சீரகம் வெந்தயம் இவை மூன்றையும் அரை ஸ்பூன் என்ற அளவில் தனித்தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு இதனை ஒன்றும் பாதியுமாக தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் இரண்டு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் எடுத்து கொதிக்க விட வேண்டும்.
பின்பு நாம் தட்டி வைத்துள்ள பொருட்களை தண்ணீர் கொதிக்கும் பொழுது சேர்க்க வேண்டும்.
இந்த தண்ணீரானது ஒரு கிளாஸ் வரும் வரை சுண்ட விட வேண்டும்.
இது வெதுவெதுப்பான பதத்திற்கு வந்தவுடன் குடிக்கலாம்.
இது குடித்த பத்து நிமிடத்திலேயே நமது உடலில் இருக்கும் வாயு அனைத்தும் வெளியேறிவிடும்