ஒரு மணி நேரத்தில் பேன், ஈறு ஒட்டுமொத்தமாக ஒழிந்து விடும்!

Photo of author

By Kowsalya

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தலையில் சுத்தம் இல்லாத தால் பொடுகு, பேன், ஈறு தொல்லை வருகின்றன. ஒரே மணி நேரத்தில் பேன், ஈறு ஒட்டுமொத்தமாக ஒழிய இந்த இயற்கை முறையை பயன்படுத்தி பலன் பெறுங்கள்!

தேவையான பொருட்கள்:

1. எலுமிச்சை பழம்

2. வேப்ப எண்ணெய்

3. பூண்டு

செய்முறை:

1. முதலில் ஒரு பவுலை எடுத்துக் கொள்ளவும்.

2. அரை எலுமிச்சை பழ அளவு ஜூசை பிழிந்து கொள்ளவும்.

3. அதன்பின் வேப்ப எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி கலந்து கொள்ளவும்.

4. பிறகு மூன்று பல் பூண்டை எடுத்து தோல் உரித்து நன்றாக மைய இடித்து சேர்த்துக் கொள்ளவும்.உங்கள் தலையில் எவ்வளவு பேன் இருக்கிறதோ அதற்கு ஏற்றவாறு இந்த கலவையை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.

5. இதை எடுத்து உங்களது தலையில் வேர்கால்களில் படும்படி நன்றாக தடவி விடவும்.

6. உங்கள் தலையில் தடவிக் கொண்டிருக்கும் பொழுதே பேன்கள் வேறு இடத்திற்கு ஓடிக்கொண்டிருக்கும். ஏனெனில் அதன் கசப்புத்தன்மை தாங்காமல் வேறு இடத்திற்கு சென்று கொண்டிருக்கும். அதனால் தலை முழுவதும் வேர்கால்களில் நன்கு படும்படி தேய்த்து விடுங்கள்.

7. 1 மணி நேரம் கழித்து தலையை மைல்டான ஷாம்பு போட்டு தலையை கழுவிக் கொள்ளுங்கள்.

8. சீப்பு போட்டு சீவினால் அனைத்து பேன்களும் வந்துவிடும் மற்றும் ஈறுகளும் வந்துவிடும்.

9. அதிகமான பேன்கள் இருந்தால் வாரம் மூன்று முறை பயன்படுத்துங்கள். குறைவாக இருந்தால் ஒரு முறையே போதும்.