கனடா நாட்டில் பிரசவ வார்டு முழுவதும் இந்திய பெண்களாக நிறைந்துள்ளனர்!! அந்நாட்டு இளைஞர் சர்ச்சை பேச்சு!!

Photo of author

By Gayathri

கனடா மற்றும் இந்தியாவின் இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா கனடாவின் இடையே பல சங்கடத்திற்குரிய நிகழ்வுகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், கனடா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்திய பெண்கள் குறித்து தவறான முறையில் பேசி உள்ளார். இது தற்பொழுது வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட ஒவ்வொருவரும் தங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை அதில் தெரிவித்து வருகின்றனர்.

இந்த இளைஞர் குறிப்பிடும் பொழுது, இந்திய பெண்கள் அனைவரும் கனடாவிற்கு வந்து தங்களுடைய குழந்தைகளை பெற்றுக் கொள்வதாகவும், இதன் மூலம் அந்த குழந்தைக்கு கனடா நாட்டில் சிட்டிசன்ஷிப் கிடைக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
மேலும், இவ்வாறு பிறக்கும் குழந்தைகள் பிற்காலங்களில் தங்களுடைய குடும்பங்கள் அனைத்தையும் இலவச இணைப்பாக கனடாவிற்கு குடியரசு செய்கின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், கனடாவில் உள்ள பிரசவ வார்டுகள் கனடா வந்த இந்தியப் பெண்களால் நிரம்பி இருப்பதாக ஒரு செவிலியர் தனது உறவினரிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கனடா நாட்டில் அனைவருக்கும் சமமான சிகிச்சை தரப்பட வேண்டும் என்றாலும் இந்தியப் பெண்கள் அதிக இடங்களை எடுத்துக் கொள்வது போல இருப்பதாக அவர் அப்பதிவில் கூறியிருக்கிறார்.

அவர்கள் கனடா நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை என்பதால் இதற்குப் பிரசவத்திற்கு பில் கட்ட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் கனடாவில் பிறப்பதால் அந்த குழந்தை கனடா குடியுரிமை பெறுகிறது. அந்த குழந்தை வளர்ந்த பிறகு கனடாவுக்கு வருகிறது. சீக்கிரமே பெற்றோர் உட்பட குடும்பத்தையே ஸ்பான்சர் செய்து கூட்டி வந்துவிடுகிறார்கள். கனடா நாட்டவர் கட்டும் வரியில் அதன் பிறகு அவர்கள் இங்கேயே இருந்துவிடுகிறார்கள்” என்றும் அவர் குற்றம் சாட்டி அவ்விடியோவில் பதிவிட்டு இருக்கிறார்.