காஞ்சிபுரம் மாவட்டத்தில் நண்பனை சரமாரியாக வெட்டிய சம்பவம்! அப்பகுதியில் பரபரப்பு!

0
156
In Kanchipuram district, a friend was hacked to death! Excitement in the area!
In Kanchipuram district, a friend was hacked to death! Excitement in the area!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நண்பனை சரமாரியாக வெட்டிய சம்பவம்! அப்பகுதியில் பரபரப்பு!

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தை அடுத்த பல்லாவரம் பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிரஞ்சீவி (24) பொழிச்ச்லூர் விநாயகா நகரை சேர்ந்தவர் பாண்டியன் (45). இவர்கள் இருவரும் பம்மல் நாகல் கேணியில் உள்ள மெயின் மார்க்கெட்டில் மீன் வெட்டும் வேலை பார்த்து வருகின்றார்கள்.

மேலும் இந்நிலையில் கடந்த பத்தாம் தேதி இரவு பாண்டியன் சிரஞ்சீவியின் வீட்டிற்கு சென்று அவரது மனைவியை கத்தியை காட்டி மிரட்டி ஆபாசமாக பேசியுள்ளார். இந்த தகவல் சிரஞ்சீவிக்கு தெரிய வந்தது. மேலும் நேற்று முன் தினம் இரவு அவருடைய நண்பர் ஹரிஹரன் (26) என்பவருடன் மது போதையில் வீட்டுக்கு சிரஞ்சீவி சென்று தகராரில் ஈடுபட்டார்.

மேலும் அப்போது ஆத்திரமடைந்த சிரஞ்சீவி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாண்டியனின் தலையில் சரமாரியாக வெட்டினார். அந்த இடத்திலிருந்து சிரஞ்சீவி தப்பி சென்றார். தகராறில் படுகாயம் அடைந்த பாண்டியனை அக்கம் பக்கத்தினர் மீது குரோம்பேட்டை அரசு மருத்துவமனையை சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேலும் அரசு மருத்துவமனையில் முதலா உதவி செய்தவுடன் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. அப்போது பாண்டியன் சிகிச்சை பலனின்றி பரிதபமாக உயிரிழந்தார். இந்நிலையில் தப்பி ஓடிய சிரஞ்சீவியை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். மேலும் சிரஞ்சீவியை   சங்கர் நகர் போலீசாரிடம் ஊர் பொதுமக்கள்  ஒப்படைத்தனர். மேலும் விசாரணை மேற்கொண்டு தலைமறைவாக இருந்த ஹரிஹரனையும் கைது செய்தனர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleதிடீர் மரணமடைந்த பெண்! காரணம் இதுதானா? அச்சத்தில் அப்பகுதி மக்கள்!! 
Next articleமாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது குறித்து முக்கிய தகவல்! செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்!!