மங்களூரில் தாய் மகள் பேத்தி அடுத்தடுத்து மூன்று பேர் கிணற்றில் விழுந்து தற்கொலை!
கடலூர் மாவட்டம் மங்களூர் அருகே மலையனூர் கிராமத்தை சேர்ந்த சிவகுருநாதன் இரண்டாவது மனைவி மிஸ்பா சாந்தி (35) மற்றும் இவரது மகள் கெலன்கிரேஸ் (8) மற்றும் இவரது மாமியார் டெபரோல் கல்யாணி (60) மூன்று பேரும் பெருமாள் கோயில் அருகே உள்ள வேல்முருகன் என்பவரது கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
இவரது உடலை சிறுபாக்கம் போலீசார் வேப்பூர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மீட்டு உடற் கூறு ஆய்விற்காக முண்டியம்பாக்கம் பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தியதில் கோவிந்தசாமி சிவகுரு நாதன் வயது (45) இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார்.
இவர்களுக்கு இரண்டு பெண்குழந்தை உள்ள நிலையில் சிவகுரு நாதன் சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் மருந்து கம்பெனிகள் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மட்டும் சென்னையில் வாடைகவீட்டில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில், வாடகை வீட்டில் இருந்த போது வீட்டின் உரிமையாளரான மிஸ்பா சாந்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
திருமணம் செய்யாமலே இவருடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு முதல் மனைவி சுமதி இறந்து விட்டார்.இந்நிலைமயில் சொந்த ஊருக்கு வந்து தங்கியுள்ளார் சிவகுருநாதன்.
மிஸ்பா சாந்தி மற்றும் இவரது குழந்தை அருள் கெலன்கிரேஸ் மற்றும் மாமியார் டெபரோல் கல்யாணி சென்னையிலேயே இருந்த நிலையில் கடந்த 27-11-2022 அன்று மூன்று பேரும் மலையனூர் வந்தனர்.
இந்நிலையில் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் இன்று காலை சடலம் இருப்பதை பார்த்து பொது மக்கள் அளித்த தகவல் அடிப்படையில் சிறுபாக்கம் போலீசார் வேப்பூர் தீயணைப்பு துறையினர் மூலம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து தற்கொலையா கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.