சிவகங்கை மாவட்டத்தில் விஷப்பாம்பு குட்டிகளுடன் குடும்பம் நடத்தி வரும்  வினோத மனிதர்கள்!..

சிவகங்கை மாவட்டத்தில் விஷப்பாம்பு குட்டிகளுடன் குடும்பம் நடத்தி வரும்  வினோத மனிதர்கள்!..

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பெரியார் நகரை சேர்ந்தவர் தான் அபுபக்கர் சித்திக்.இவரது வீட்டில் நேற்று முன்தினம் ஏ.சி. எந்திரத்திற்குள் இருந்து 3 பல்லிகள் அவரை எட்டி பார்ப்பதாக இவரது மகன் சுலைமான் கூறியுள்ளார்.

மகன் சொன்னதை கேட்ட அபுபக்கர் சித்திக் உடனடியாக ஏ.சி. எந்திரத்தை நிறுத்தி விட்டு ஏ.சி. பழுதுபார்க்கும் நபரைதொலைபேசியில் தொடர்பு கொண்டு  வரவழைத்துள்ளார்.அந்த நபர் வந்தவுடன்  ஏ.சி. எந்திரத்தை கழற்றி பார்த்தார்.

அப்போது அந்த எந்திரத்திற்குள் ஐந்திற்கு  மேற்ப்பட்ட பாம்புகள் மற்றும் அதோடைய குட்டிகள் குடித்தனம் நடத்தி வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நிலைய சிறப்பு அலுவலர் ஆனந்த் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். ஏ.சி. எந்திரத்திற்குள் இருந்த பாம்புகளை ஒன்றன் பின் ஒன்றாக லாவகமாகவும் அதனை கோபம் படுத்தாத வகையில் பிடித்தனர். மொத்தம் 5 விஷ பாம்புகள் பிடிபட்டன.

அவை கொம்பேறி மூக்கன் வகையை சேர்ந்த விஷ பாம்புகள் ஆகும்.இந்த பாம்புகளை தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்து ஒரு சாக்குப்பையில் அடைத்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அந்த பாம்புகள் மண்மலை காட்டில் விடப்பட்டன.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

Leave a Comment