திருப்பூர் மாவட்டத்தில் கண்ணிமைக்கும் நொடியில் பெண்ணிடம் நகையை பறித்து சென்ற வாலிபர்கள்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!
திருப்பூர் காங்கேயம் சாலை அமர்ஜோதி கார்டன் பகுதியை சேர்ந்தவர் குருசரண். இவரது மனைவி மஞ்சுளா தேவி (40). மஞ்சுளா தேவி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மஞ்சுளா தினந்தோறும் காலையில் நடை பயிற்சி ,உடற்பயிற்சி போன்றவற்றை செய்யும் பழக்கம் உடையவர். வழக்கம் போல் கடந்த 13 ஆம் தேதி காலையில் வீட்டின் அருகே நடை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அதே வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் திடீரென்று மஞ்சுளா தேவியை வழிமறைத்தனர். அப்போது மஞ்சுளா கூச்சலடா ஆரம்பித்தார் அதனை கண்ட மூன்று பேரும் கத்தியை காட்டி மிரட்டினார்கள். மஞ்சுளா அணிந்திருந்த 71/2 சவரன் தாலிக்கொடியை பறித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து நல்லூர் ரூரல் போலீசாரிடம் மஞ்சுளா தேவி புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் மஞ்சுளா நடை பயிற்சி மேற்கொண்ட பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் மதுரை பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் (22), கௌதம் (21), விக்னேஷ் என்கிற விக்கி (27). ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் நகையை பறித்து சென்றது தெரியவந்தது. மேலும் அவர்கள் மூன்று பேரும் காங்கேயம் ரோடு டூம் லைட் பகுதியில் உள்ள ஒரு இனிப்பு கடையில் பணிபுரிந்து வருவதாகவும் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது இதை தொடர்ந்து மூன்று பேரையும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் மேலும் நகையை மீட்டு மஞ்சுளாதேவியிடம் ஒப்படைத்தனர்.