நிவாரண நிதி விவகாரத்தில் தமிழகத்திற்கு நிதியும் கிடைத்துள்ளது நீதியும் கிடைத்துள்ளது – தமிழிசை செளந்தரராஜன்..!!

Photo of author

By Vijay

நிவாரண நிதி விவகாரத்தில் தமிழகத்திற்கு நிதியும் கிடைத்துள்ளது நீதியும் கிடைத்துள்ளது – தமிழிசை செளந்தரராஜன்..!!

தமிழகத்திற்கு மத்திய அரசு குறைவான வெள்ள நிவாரண நிதி ஒதுக்கியது குறித்து தமிழிசை செளந்தரராஜன் அளித்துள்ள விளக்கம் மக்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, தெலுங்கானாவிற்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு சென்ற தமிழிசை செளந்தரராஜனிடம் இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு அதிகமான திட்டங்களை வழங்கியுள்ளார் என்பது தான் உண்மை. நிதியை பொறுத்த வரை வறட்சி நிவாரணமாக இருந்தாலும் சரி, வெள்ள நிவாரணமாக இருந்தாலும் சரி அனைத்திற்கும் ஒரு கணக்கீடு உள்ளது. அந்த வகையில் வெள்ளத்திற்கு எவ்வளவு நிவாரணம் கொடுக்க வேண்டும் பேரிடருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என அளவு உள்ளது.

எனவே தமிழகத்தை பொறுத்தவரை நிதியும் கிடைத்துள்ளது, நீதியும் கிடைத்துள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தயாரித்ததில் காங்கிரசை விட ஸ்டாலின் தான் அதிக உரிமை கொண்டாடுகிறார். இதற்கு முன்பு அவர்கள் தமிழகத்திற்கு என்ன திட்டம் மற்றும் வளர்ச்சியை கொண்டு வந்தார்கள். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த சமயத்தில் தமிழகத்தை முற்றிலுமாக மறந்தனர்.

நாட்டில் சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத வகையில் பிரதமர் மோடி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தேர்தல் ஆணையம் காங்கிரஸ் தரப்பு, பாஜக தரப்பு என இரு தரப்பிலும் தான் கேள்வி எழுப்பியுள்ளது. அப்படி உள்ள நிலையில், எப்படி ஒரு தலைபட்சமாக இருக்கும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.