Erode: ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து!!இடைத்தேர்தலில் போட்டியில்லை என்று முடிவு செய்து இருக்கிறார்
ஈரோடு சட்டமன்ற உறுப்பினர் பதவி இப்போது காலியாக உள்ளது. முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவர் இ வி கே எஸ் இளங்கோவன் மரணமடைந்ததால் ஈரோட்டில் இடைத்தேர்தல் வந்துள்ளது. இதற்கு முன்பு இ வி கே எஸ் இளங்கோவன் மகனான ஈ வே ரா மரணம் பணம் அடைந்ததால் தேர்தல் வந்தது இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் இ வி கே எஸ் இளங்கோவன் போட்டியிட்டு தொகுதியை கைப்பற்றினார்.
ஈரோடு தொகுதியில் இவரும் இறந்துவிட்டதால் தொகுதி மக்கள் வருத்தத்தில் வாடி போய் உள்ளனர். இதனால் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சட்டமன்ற உறுப்பினர் இடம் காலியாக உள்ளது என்று அறிவித்துள்ளனர் இன்னும் ஆறு மாதத்தில் இதற்கான தேர்தல் நடத்தப்படும் என்று கூறியுள்ளனர். மேலும் விஜய் இடம் போட்டியிடப்படுமா என்ற கேள்வி எழுப்பியதற்கு டி வி கே தலைவர் விஜய் எங்கள் இலக்கு 2026 சட்டமன்ற உறுப்பினர் தேர்தல் என்று கூறியுள்ளார்.
இன்னும் தேர்தலுக்கு இரண்டு வருடம் இருக்கும் காரணத்தினால் இடைத்தேர்தல் போட்டியிட ஆர்வம் இல்லை என்று கூறியுள்ளார். 2026 ல் ஆட்சியை பிடிப்பது எங்கள் இலக்கு என்று கூறியுள்ளார். இதனால் ஈரோடு சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்று கூறியுள்ளார் மேலும் யாருக்கும் ஆதரவு இல்லை என்று கூறியுள்ளார்.
டி வி கே தொண்டர்கள் அனைவரும் கட்சிப் பணியில் தீவிரமாக உழைக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் கட்சிக்குள் எந்த உட்கட்சி சலசலப்பும் இருக்கக் கூடாது என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 2026 இல் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே இலக்கு.