தமிழக வெற்றிக் கழக பொதுக்கூட்டத்தில் விஜய் திமுக வின் கூட்டணி கட்சியினரை அவர்களுக்கு எதிராக இருக்கும் வகையில் பேசியுள்ளார். திமுக தனது கூட்டணி கட்சிகளை அடக்குமுறையில் பயன்படுத்துகிறது தென்றும், குறிப்பாக காங்கிரசை ஓட்டுக்காக மட்டுமே வைத்துள்ளது என்று நேரடியாகவே கூறியுள்ளார். முன்னதாக மாநாட்டில், எங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்பவர்களுக்கு ஆட்சியில் பங்கு தருவோம் என்று தெரிவித்தார்.
இதுவே திமுகவில் பூதாகரமாக வெடித்து, விடுதலை சிறுத்தை காங்கிரஸ் என அனைவரும் தனித்தனியே ஸ்டாலினை வஞ்சிக்க ஆரம்பித்து விட்டனர். தோழமைக் கட்சி என்றுக் கூறிக்கொண்டு எங்களில் யாரும் முதல்வராகவிட முடியாது என்றும் தெரிவித்தனர். அதேபோல காங்கிரசும் எவ்வளவு நாட்கள் திமுகவை நம்பி இருப்பது என்று அதன் தலைவர்கள் பேச ஆரம்பித்து விட்டனர். இவர்களையெல்லாம் அழைத்து ஸ்டாலின் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தி அமைதி படுத்திய நிலையில் மீண்டும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் சூட்டை கலப்பும் விதமாக பேசி உள்ளார்.
மேற்கொண்டு இது திமுகவிற்கு நெருக்கடி கொடுப்பது போல் தான் இருக்கும். காங்கிரஸ் குறித்து விஜய் பேசியது திமுக மற்றும் அதன் கூட்டணிக்கிடையே விரிசலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. முன்னதாகவே காங்கிரஸ் தலைவர்கள் ஸ்டாலின் மீது அதிருப்தியில் உள்ளனர். இச்சமயத்தில் விஜய் பேசியது அவர்களுக்கிடையே மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும். நாளடைவில் கூட்டணியில் விரிசல் ஏற்பட்ட தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோர்க்கவும் அதிக வாய்ப்புள்ளது.