மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மும்மொழிக் கொள்கையை ஏற்றால் மட்டுமே 2000 கோடி கல்வி நிதியானது தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் என கூறியதற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு தெரிவித்து X தளத்தில் தன்னுடைய கருத்தை பதிவப்பட்டிருந்தார்.
அந்தக் கருத்தில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதிமுறைகளுக்குள் தமிழக அரசு வரவேண்டும் என மத்திய கல்வி அமைச்சர் கூறி இருந்ததை ஏற்க முடியாது என்றும் மாநில அரசுகளுக்கு கல்வி நிதி உதவி வழங்குவதால் மத்திய அரசானது எஜமானாக மாறிவிட முடியாது என்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருந்தார்.
மேலும் மத்திய அரசினுடைய இந்த போக்கினை கண்டு கொண்டு தமிழக அரசு சும்மா இருக்காது என்றும் தமிழர்களால் இதை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்திருந்தார். இவருடைய X தள பதிவிற்கு தற்பொழுது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் பதிலடி கொடுத்திருக்கிறார்.
அண்ணாமலை தெரிவித்த பதிலடி பின் வருமாறு :-
தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடைய மகன் / மகள்கள் மற்றும் பேரன்/ பேத்திகள் தனியார் பள்ளிகளில் மும்மொழிகளை பயிலும் பொழுது எங்களுடைய பிள்ளைகள் ஏன் அரசு பள்ளிகளில் முன்மொழிகளை பயிலக் கூடாது என கேள்வி எழுப்பியிருக்கிறார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தை தொடர்ந்து மூன்றாவது ஆக ஒரு மொழி பயிற்றுவிக்கப்படுவதால் தமிழக அரசுக்கு என்ன பிரச்சனை என்ற கேள்வியை எழுப்பியதோடு CBSC கல்வி பாடத்திட்டத்தின் மூலம் பணமிருக்கக்கூடிய பிள்ளைகள் மும்மொழிகளை பயில்கின்றனர் என்றும் பணமில்லாத குழந்தைகள் இவற்றை படிக்க முடியவில்லை என்றும் தமிழக அரசு ஓரவஞ்சனை செய்கிறது என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளார்.