இரு படைகளுக்கு ஏற்பட்ட போராட்டத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!.

Photo of author

By Parthipan K

இரு படைகளுக்கு ஏற்பட்ட போராட்டத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!.

Parthipan K

In the struggle between the two forces, 4 people died due to electric shock!

இரு படைகளுக்கு ஏற்பட்ட போராட்டத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!.

கின்ஷாசாவிலுள்ள ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அந்த நாட்டின் படைகளுக்கும் மற்றும் கிளர்ச்சி படைகளுக்கும் ஆகிய இரு படைகளுக்கும் நெடுநாட்களாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.மேலும் இந்த உள்நாட்டுப் போரினால் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை காலி செய்து விட்டு அங்கிருந்து ஓடி விட்டார்கள்.

அதன்படி அங்கு ஏற்படும் நிலைமையைக் கட்டுப்படுத்துவது ஐ.நா.வின் அமைதிப்படை இருக்கிறது. ஐநா இருந்தும் ஒரு உதவும் செய்ய வில்லை. ஆனால் அந்த அமைதிப்படை தனது கடமையை கூட சரிவரச்செய்வதில்லை. ஐநா இருந்த போதும் கூட கிளர்ச்சிப்படைகள் மீது போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகன்றனர்.

அது இப்போது பூதம்பமாக வெடித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக நடந்த போராட்டத்தில் இதுவரை மட்டும் ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் மூன்று பேர் உள்பட 15 பேர் கொல்லப்பட்டனர். 60க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

இதை அந்த நாட்டின் அரசு செய்தி தொடர்பாளர் பேட்ரிக் முயாயா உறுதிப்படுத்தினார். இதற்கு மத்தியில் நேற்று முன்தினம் கிழக்கு காங்கோவில் தெற்கு கிவு மாகாணத்திலுள்ள கிலோமோனி மாவட்டத்தில் ஐ.நா. எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக மேலே சென்று கொண்டிருந்த மின்கம்பி அறுந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே 4 பேர் சுருண்டு விழுந்து பரிதாபமாக பலியானார்கள்.

இது ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திவுள்ளது. இந்த பரிதாப சம்பவத்தை உவிரா நகர துணை மேயர் கிகி கிபாரா உறுதிசெய்தார். இதுபற்றி அவர் தெரிவிக்கையில் சம்பவ இடத்தில் மின்சார வயர் அறுந்து விழுந்தபோது நான் இருந்தேன்.

போலீசாரும் பாதுகாப்பு படையினரும் கூட்டத்தைக் கலைக்காமல் இருந்திருந்தால் அந்த விபத்தில் பலி எண்ணிக்கை உயர்ந்திருக்கும்.அந்த விபத்தில் நானும் உயிரை விட்டு இருப்பேன். கிட்டத்தட்ட அதிர்ஷ்வசமாக உயிர் தப்பினேன் என தெரிவித்தார்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.