அறிமுகமாகும் கலைஞர் கைவினைத் திட்டம்!! 50 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை கடனுதவி!!

0
92
Inaugural Artist Craft Project!! 50 thousand to 3 lakh loan!!
Inaugural Artist Craft Project!! 50 thousand to 3 lakh loan!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள கைவினை கலைஞர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையிலும் கைவினை கலைஞர்களையும் தொழில் முனைவோர்களாக உயர்த்திடும் நோக்கிலும் புதிதாக ” கலைஞர் கைவினைத் திட்டம் ” என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு என விரிவான திட்டம் ஒன்றினை உருவாக்கி அதற்கான அரசாணையை வெளியிட்டு இருக்கிறது.

இந்தத் திட்டமானது, குடும்பத் தொழில் அடிப்படையில் அல்லாமல், 25 கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டத்தின் மூலம் கிடைக்கக்கூடிய பயன்கள் :-

✓ புதிய தொழிலைத் தொடங்குவதற்கும், செய்யும் தொழிலை நவீன வடிவில் விரிவாக்கம் செய்திடவும் கடன் உதவிகளும், திறன்மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்படும்.

✓ கலைஞர் கைவினைத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.50,000/- வரை 25 சதவீதம் மானியத்துடன் கூடிய ரூ.3.00 இலட்சம் கடனுதவியும். 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்குவதோடு, தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்ச வயது 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இதன் மூலம், மரவேலைப்பாடுகள், படகு தயாரித்தல், உலோக வேலைப்பாடுகள். பூட்டு தயாரித்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், கண்ணாடி வேலைப்பாடுகள். மண்பாண்டங்கள். சுடுமண் வேலைகள். கட்டட வேலைகள், கூடை முடைதல், கயிறு. பாய் பின்னுதல், துடைப்பான்கள் செய்தல். பொம்மைகள் தயாரித்தல், மலர் வேலைப்பாடுகள், மீன் வலை தயாரித்தல், தையல் வேலை, நகைசெய்தல், சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலை, துணி வெளுத்தல் தேய்த்தல், இசைக்கருவிகள் தயாரித்தல், துணி நெய்தல் மற்றும் துணிகளில் கலை வேலைப்பாடுகள் செய்தல், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், பாசிமணி வேலைப்பாடுகள், மூங்கில், சணல், பனை ஓலை. பிரம்பு வேலைப்பாடுகள், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், கண்ணாடி வேலைப்பாடுகள், சுதை வேலைப்பாடுகள் என அனைத்தும் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இவை மட்டுமின்றி, பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள் மற்றும் கைவினைப் பொருள்கள் உள்ளிட்ட 25 வகையான தொழில்களுக்குக் கடன் வழங்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பிக்கும் முறை :-

இத்திட்டத்தில் பயன்பெற www.msmeonline.in.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.தகுதியான விண்ணப்பங்களை மாவட்டத் தொழில் மையத்தின் பொது மேலாளர்கள் தலைமையில் உள்ள குழு சரிபார்த்து, வங்கிகளுக்குப் பரிந்துரைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Previous articleவீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! 3000 வரை குறையும் மாதத்தவனை!!
Next articleஆதவ் அர்ஜுனா கட்சியை விட்டு விலகுவது குறித்து திருமா வெளியிட்ட முக்கிய தகவல்!!