இந்த பொருளில் தூபம் போட்டால் பண மழை கொட்டுவது உறுதி!! முற்றிலும் அனுபவ உண்மை!!

Photo of author

By Divya

இந்த பொருளில் தூபம் போட்டால் பண மழை கொட்டுவது உறுதி!! முற்றிலும் அனுபவ உண்மை!!

இன்று பணம் தான் ஒரு மனிதனுக்கு மதிப்பு,மரியாதை கொடுக்கிறது.பணம் இல்லாதவர்களை இந்த உலகம் ஏளனமாகத் தான் பார்க்கும்.அத்தியாவசிய பொருட்களில் இருந்து ஆடம்பர பொருட்கள் வரை விரும்பியதை வாங்க பணம் இருக்க வேண்டும்.

விரும்பிய வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசையில் அனைவரும் இரவு,பகல் பாராமல் கடுமையாக உழைக்கின்றனர்.விருப்பம் இருக்கோ இல்லையோ கிடைக்கின்ற வேலையை செய்கின்றனர்.இவ்வாறு கஷ்டப்பட்டும் பண வரவு மட்டும் வந்தபாடில்லை என்று வேதனை படும் நபர்கள் பூஜை அறையில் ஒரு எளிய பரிகாரம் செய்தால் போதும்.பண வரவு அதிகரித்து வாழ்வில் நிம்மதி சந்தோசம் கிடைக்க தொடங்கும்.

இதற்கு முதலில் பூஜை அறையில் ஒரு சிறிய மண் பானை வைத்து மஞ்சள் குங்குமத்தில் பொட்டு வைக்கவும்.அதன் பின்னர் அதில் கல் உப்பு நிரப்பி உங்கள் குடும்பத்தில் எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ அத்தனை மாவிலையை கல் உப்பில் சொருகி வைக்கவும்.

அதன் பின்னர் அந்த கல் உப்பு நிரப்பிய மண் பானைக்கு தூபம் போட வேண்டும்.சாம்பிராணி தூபத்தில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து தூபம் போட்டால் இன்னும் சிறப்பு.

இந்த பரிகாரத்தை வியாழன் அல்லது வெள்ளிக் கிழமையில் செய்யலாம்.காலை 6 மணிக்குள் செய்வது நல்லது.தொடர்ந்து 11 வாரங்கள் செய்து வந்தால் பணத் தட்டுப்பாடு நீங்கி பண வரவு அதிகரிக்கும்.