ரேஷன் கார்டுகளுக்கு ஊக்கத்தொகை!! வெளிவந்த சூப்பர் அப்டேட்!!

Photo of author

By Rupa

ரேஷன் கார்டுகளுக்கு ஊக்கத்தொகை!! வெளிவந்த சூப்பர் அப்டேட்!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு பல நலத்திட்ட உதவிகளை செய்து வரும் வேலையில் தற்பொழுது பொங்கல் பண்டிகையொட்டி ஆயிரம் ரூபாய் ரொக்கமும் கரும்பு உள்ளிட்ட பொருள்களும் வழங்கப்பட்டது.

இதுபோல மாதந்தோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் பொருட்கள் அனைத்தும் விநியோகம் செய்யப்பட்டு வரும் பட்சத்தில் சில இடங்களில் தற்போது வரை இதில் முறைகேடு நடந்து வருகிறது.

அதாவது சர்க்கரை, அரிசி, கோதுமை போன்றவற்றை போடுவதில் எடை முரணாக  இருப்பதாக பல இடங்களில் தொடர்ந்து புகார் வந்த வண்ணமாகவே தான் உள்ளது.

அந்த வகையில் தமிழக அரசு வரும் நாட்களில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விநியோகம் செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் பாக்கெட் முறையில் அதாவது எடையுடன் கூடிய பாக்கெட் கொண்டு வழங்குவதாக தெரிவித்துள்ளது. இவ்வாறு செய்வதால் எடையில் மாற்றம் ஏற்படாது. அது மட்டுமின்றி பூச்சிகளால் பொருள்கள் வீணாக போகும் நிலையும் உண்டாகாது.

தற்பொழுது மத்திய அரசு செரிவூட்டப்பட்ட அரிசியை வழங்க முடிவு செய்துள்ளதை அடுத்து  வரும் ஓராண்டுக்குள் அனைத்து மாநிலங்களிலும் இது செயல்பாட்டிற்கு வரும் என கூறுகின்றனர்.இதனிடையே தற்பொழுது நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மூலம் புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

தற்பொழுது பிரதமரின் கரீப் கல்யாண் அண்ண யோஜனா திட்டத்தின் மூலம் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த பொருட்கள் மக்களை சரியாக சென்றடைந்திருந்தால் அவ்வாறு வழங்கப்பட்ட ஊழியர்களுக்கு ஒவ்வொரு ரேஷன் கார்டு வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் 2020 முதல் அந்த ஆண்டு நவம்பர் மாதம் முடியும் வரை மற்றும் அடுத்த ஆண்டு மே மாதம் முதல் மார்ச் வரை இத்திட்டத்தின் கீழ் பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், அவ்வாறு வழங்கப்பட்ட ரேஷன் கார்டுக்கு ஏற்ப ரூ 0.50 என்ற வீதத்தில் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனக் கூறியுள்ளனர். இது குறித்து தெற்கு துணை ஆணையாளர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.