வீட்டில் செல்போன் இன்றி ஆன்லைன் வகுப்பு படிக்க இயலாததால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தீக்குளித்த சம்பவம் !!

0
152

 

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள நஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளியின் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள நஞ்சை புளியம்பட்டி பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளி வேலுமணியின் மகள் ஹேமமாலினி என்பவர், அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

கொரோனாவால் இணையவழிக் கல்வி மற்றும் தொலைக்காட்சி மூலம் கல்வி பாடம் நடத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹேமா மாலினி, வீட்டில் தொலைக்காட்சி மூலமாக கல்வி கற்று வந்துள்ளார். ஆனால் ,சில நாட்களுக்கு பின் கேபிள் சரியாக இயங்காததால்,பாடம் கற்க செல்போன் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார்.

இதனால் மாணவின் பெற்றோர் செல்போனுக்கு, உறவினர் ஒருவருவரிக் பழைய செல்போன் ஒன்றை கொடுத்துள்ளனர். அதுவும் சில நாட்களுக்கு பின்பு இயங்காமல் போனது.

ஆன்லைன் பாடம் கற்க முயன்ற மாணவி செல்போன் சரியாக இயங்காத காரணத்தினால் மன உளைச்சலுக்கு ஆளாகி ,வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.அதிகாலை நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாதபோது கதவை பூட்டி ,தன் உடலுக்கு தானே மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.

வீட்டில் இருந்து புகை வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர், விரைந்து வந்து கதவை உடைத்து அப்பெண்ணை மீட்க முயற்சி செய்தனர் .ஆனால், எரிந்த நிலையில் உயிரிழந்த ஹேமா மாலினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleகாதலன் காதலை மறுத்ததால் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை!
Next articleபடு கிளாமர் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா!